இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக அதிரடியாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ஜெய்ஸ்வால் போட்டிக்கான திட்டம் குறித்து பேசி இருக்கிறார்.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியா வந்தது. ஜெய்ஸ்வாலுக்கு இந்தியாவில் முதல் டெஸ்ட் தொடராக அது அமைந்தது. அந்தத் தொடரில் மொத்தம் இரண்டு இரட்டை சதங்களுடன் 712 எடுத்து தொடர் நாயகனாக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று அரை சதங்கள் ஆட்டநாயகன் விருது
இந்த தொடரின் முதல் போட்டியில் வேகப்பந்துவீச்சுக்கு முதலில் சாதகம் இருந்த காரணத்தினால் பொறுமையாக விளையாடிய 118 பந்துகளில் ஜெய்ஸ்வால் 56 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 17 பந்தில் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் 52 பந்துகளில் 71 ரன்கள் அடித்தார். இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் 45 பந்துகளில் மீண்டும் 51 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் மொத்தம் மூன்று அரை சதங்கள் அடித்திருக்கிறார். ரோகித் சர்மாவுடன் அவர் ஆரம்பித்த அதிரடியான விதம் இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற காரணமாக அமைந்தது.
கம்பீர் ரோகித் தந்த சுதந்திரம்
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ஜெய்ஸ்வால் பேசும் பொழுது “நான் எனது அணிக்காக என்ன செய்ய முடியும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். முதல் டெஸ்ட் போட்டியில் சென்னையில் இருந்த நிலைமை வேறு. கான்பூரில் இங்கு வேறு. எனவே நான் எனது அணிக்கு ஏதாவது செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஒவ்வொரு இன்னிங்ஸும் முக்கியமானது. அதற்கு நான் எனது முறையில் தயாராகிறேன்”
இதையும் படிங்க : முரளிதரனின் மெகா உலக சாதனை.. 39 சீரியஸில் எட்டி அஸ்வின் அசத்தல்.. வார்னேவுக்கும் கிடைக்காத பெருமை
“ரோகித் பாய் மற்றும் கம்பீர் ஸார் இருவரும் என்னை என்னுடைய வழியில் விரும்பியபடி விளையாட சொன்னார்கள். டீம் மீட்டிங்கில் குறைந்தபட்ச ஸ்கோர் எடுப்பதற்கு மிகவும் தைரியமாகவும் சுதந்திரமாகவும் விளையாட வேண்டும் என்று பேசப்பட்டது. நாங்கள் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினோம். எனவே அதற்காக நாங்கள் தொடர்ந்து சென்றோம்” என்று கூறியிருக்கிறார்.