முரளிதரனின் மெகா உலக சாதனை.. 39 சீரியஸில் எட்டி அஸ்வின் அசத்தல்.. வார்னேவுக்கும் கிடைக்காத பெருமை

0
18
Ashwin

இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது போட்டிக்கு பிறகு இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முத்தையா முரளிதரனின் மிகப்பெரிய உலக சாதனை ஒன்றை சமன் செய்திருக்கிறார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றி இருக்கிறது. இதற்கு முதல் இன்னிங்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது

- Advertisement -

இரண்டு டெஸ்டில் ரவிச்சந்திரன் அஸ்வின்

இந்தத் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் சதம் அடித்து அசத்தினார். அதே சமயத்தில் அவருக்கு முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சில் விக்கெட்டுகள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸ் பந்துவீச்சில் ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சில் இரண்டு விக்கெட் கைப்பற்றினார். மிகவும் முக்கியமான இரண்டாவது இன்னிங்ஸ் பந்துவீச்சின் பொழுது கிடைத்த சில ஓவர்களில் பங்களாதேஷ் அணியின் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி நேற்று சரிவை உண்டாக்கினார். இன்று ஐந்தாவது நாளில் முதல் விக்கெட்டாக மோமினுல் ஹக் கைப்பற்றினார். இறுதியாக இரண்டாவது டெஸ்டில் மொத்தம் ஐந்து விக்கெட் கிடைத்தது. இரண்டு டெஸ்டில் 11 விக்கெட் கைப்பற்றி சதம் அடித்திருக்கிறார். எனவே தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -

முத்தையா முரளிதரனின் உலக சாதனை சமன்

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நடந்து முடிந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மொத்தம் 39ஆவது டெஸ்ட் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 39 டெஸ்ட் தொடர்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் 11 முறை தொடர் நாயகன் விருதை வென்று இருக்கிறார்.

இதையும் படிங்க: நான் மேஜிக் செய்றவன் கிடையாது.. ஆனா இந்த வீரர் பெரிய ஆளா வரப்போறாரு.. நல்ல மனசு – பும்ரா பாராட்டு

இதன் மூலம் 60 டெஸ்ட் தொடர்களில் 11 முறை தொடர நாயகன் விருது வென்று மாபெரும் உலக சாதனையை இலங்கையின் முத்தையா முரளிதரன் கையில் வைத்திருந்தார். இந்த நிலையில் அந்த பிரம்மாண்ட உலக சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் வெறும் 39 டெஸ்ட் தொடர்களில் சமன் செய்திருக்கிறார். மேலும் எதிர்காலத்தில் இதை முறியடிப்பதன் மூலமாக, மிக மிக நீண்ட காலம் அவரே இந்த சாதனைக்கு சொந்தக்காரராகவும் இருக்கலாம். முத்தையா முரளிதரனின் சக போட்டியாளர் வார்னேவுக்கு கூட இது அமையவில்லை!

- Advertisement -