வீடியோ.. 100 ரன் 49 பந்து.. ஜெய்ஸ்வால் இமாலய ரெக்கார்ட்.. ஆசியன் கேம்ஸில் வரலாறு படைத்து சாதனை.!

0
7381

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹுவாங்சோ நகரில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த வருடத்திற்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் மீண்டும் இடம் பெற்றிருக்கிறது. மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு சர்வதேச அந்தஸ்தையும் வழங்கி இருக்கிறது.

ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் போட்டிகள் சர்வதேச போட்டிகளாக ஏற்றுக் கொள்ளப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. மேலும் இந்த வருட ஆசிய கோப்பை போட்டிகளில் தான் இந்திய அணி கிரிக்கெட்டில் பங்கு பெற்று இருக்கிறது. ஆசிய கோப்பை வரலாற்றில் 2010 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் முதல் முதலாக சேர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற 17ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் கிரிக்கெட் இடம் பெற்றிருந்தது.

- Advertisement -

ஆனால் 2018 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் நடைபெறவில்லை. தற்போது மீண்டும் கிரிக்கெட் சர்வதேச அங்கீகாரத்துடன் இடம் பெற்று இருக்கிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் 2010 ஆம் ஆண்டு வங்கதேச அணியும் 2014 ஆம் ஆண்டு இலங்கையும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட்டில் தங்கம் வென்றது.

இந்த வருடத்திற்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பாகிஸ்தான் இலங்கை மற்றும் பங்களாதேஷ் நேரடியாக கால் இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றனர். இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற முதலாவது காலிறுதி போட்டியில் இந்திய அணி நேபாளம் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களாக ருத்ராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் களம் இறங்கினர்.

இந்திய அணி துவக்கத்தில் அதிரடியாக விளையாடியது ருத்ராஜ் ஒரு முனையில் நிதானமாக விளையாட மறுமுனையில் அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் சதம் எடுத்தார். இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ருத்ராஜ் 25 ரன்களிலும் திலக் வர்மா இரண்டு ரன்களிலும் மற்றும் ஜித்தேஷ் சர்மா 5 ரன்களிலும் ஆட்டம் இழக்க சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் அபாரமாக சதம் எடுத்து வரலாற்று சாதனை படைத்தார்.

- Advertisement -

அதிரடியாக விளையாடிய இவர் 7 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த சதத்தின் மூலம் இளம் வயதில் டி20 போட்டிகளில் சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்திருக்கிறார் ஜெய்ஸ்வால். இவர் 21 வயது மற்றும் 279 நாட்களில் தனது டி20 சதத்தை பதிவு செய்திருக்கிறார். இதன் மூலம் சுப்மன் கில்லின் சாதனையை முறியடித்திருக்கிறார் ஜெய்ஸ்வால். இந்திய அணிக்காக சுப்மன் கில் 23 வயது 146 நாட்களில் சதம் எடுத்தது சாதனையாக இருந்தது . இதனை தற்போது ஜெய்ஸ்வால் முறியடித்திருக்கிறார்.

மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சதம் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் ஜெய்சுவால் பெற்றிருக்கிறார். இதற்கு முன்பு நடைபெற்ற இரண்டு ஆசிய விளையாட்டு களுக்கான கிரிக்கெட் தொடரிலும் பாகிஸ்தான் அணியின் காலித் லத்தீப் மட்டுமே சதம் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் ஜெய்ஸ்வால் சதம் எடுத்ததன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாவது சத்தத்தை பதிவு செய்த வீரர் என்ற பெருமையும் பெறுகிறார். மேலும் இன்றைய போட்டியில் ஜெய்ஸ்வால் எடுத்த சதத்தின் மூலம் பல்துறை விளையாட்டுப் போட்டிகளில் சதம் எடுத்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்திருக்கிறார் ஜெய்ஸ்வால்.