ரிங்கு சிங் 5 சிக்ஸ் அடிச்சதும்.. என்னை தடுத்தும் அங்க போய் வேதனைப்பட்டேன் – ஆர்சிபி யாஸ் தயால் பேட்டி

0
516
Rinku

2024 ஐபிஎல் 17வது சீசனின் ஆறாவது போட்டியில், நேற்றிரவு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை கடைசிவரை பரபரப்பாக சென்று, இறுதியில் ஆர்சிபி அணிக்கு சாதகமாக முடிந்தது.

ஆர்சிபி அணியின் இந்த வெற்றியில் பேட்டிங்கில் விராட் கோலி, தினேஷ் கார்த்திக் மற்றும் மகிபால் லோம்ரர் ஆகியோரின் பங்களிப்பு மிக முக்கியமாக இருந்தது. ஒரு பக்கம் ஆர்சிபி விக்கெட்டுகள் வேகமாக சரிந்து கொண்டிருக்க, பஞ்சாப் கிங்ஸ் பக்கம் வெற்றி வந்த பொழுது, தினேஷ் கார்த்திக் மற்றும் மகிபால் லோம்ரர் இருவரும் அதிரடியாக விளையாடி ஆர்சிபி அணியை கடைசியில் வெற்றி பெற வைத்தார்கள்.

- Advertisement -

ஆனால் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது சிராஜ் மற்றும் யாஸ் தயால் இருவரும்தான். குறிப்பாக யாஸ் தயால் பவர் பிளேவில் மூன்று ஓவர்கள் வீசினார். அந்த மூன்று ஓவர்களிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்ஸ்மேன்களால் விளையாடவே முடியவில்லை. இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணியால் பவர் பிளேவில் 40 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. நேற்றைய ஆர்சிபி வெற்றியில் இவருடைய பங்குதான் பெரிய அளவில் இருந்தது.

2022 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்ட யாஸ் தயால் சிறப்பான இடதுகை வேகப் பந்துவீச்சின் மூலமாக அனைவரது கவனத்தையும் கவர்ந்தார். இந்திய அணியில் இடது கை வேகம் பந்துவீச்சாளர்கள் இல்லாத காரணத்தினால் இவருக்கு உடனே வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் சிறப்பாக செயல்பட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இதற்கு அடுத்து 2023 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டியில், யாஸ் தயால் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் தொடர்ந்து ஐந்து சிக்ஸர்கள் அடித்து ரிங்கு சிங் கொல்கத்தா அணியை வெல்ல வைத்தார். இதற்குப் பிறகு யாஸ் தயால் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது என்று எல்லோரும் நினைத்திருந்தார்கள். இதற்கு ஏற்றபடி குஜராத் டைட்டன்ஸ் அணியும் அவரை இந்த ஆண்டு கழட்டிவிட்டது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து மீண்டு வந்துதான் தற்பொழுது மிகச் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல் ஆட்டநாயகன் விருது: தல தோனியின் சாதனையை சமன் செய்த விராட் கோலி

பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்த அவர் “அந்த போட்டிக்குப் பின்னால் என்னை சோசியல் மீடியா பக்கம் செல்ல வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால் அதைக் கேட்காமல் சோசியல் மீடியாவில் பின் தொடர்ந்தேன். மக்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நினைத்து மிகவும் வேதனைப்பட்டேன். நான் எப்படி ஆன பின்னணியில் இருந்து கடினமாக உழைத்து வந்து கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று தெரியாமல் அவர்கள் பேசுவது என்னை வருத்தப்பட வைத்தது. கிரிக்கெட்டில் இதை பின்னோக்கிப் பார்க்கும் பொழுது இது எனக்கு மட்டுமே நடந்திருக்கவில்லை. எனவே அதை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு, என்னுடைய வேலையில் கவனம் செலுத்தினேன்” என்று கூறியிருக்கிறார்.