WTC புள்ளி பட்டியல்.. தோற்ற இந்தியாவுக்கும் சரிவு.. ஜெயித்த இங்கிலாந்துக்கும் சரிவு.. வினோதமான சம்பவம்

0
125
WTC

இன்று இரண்டு பெரிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முடிவுகள் வந்திருக்கின்றன. ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று இருக்கிறது.

இன்னொரு பக்கத்தில் பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணிகள் மோதிய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி மிகச் சிறப்பான பந்துவீச்சின் மூலம் ஆஸ்திரேலியாவை 27 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களது மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தி இருக்கிறது.

- Advertisement -

இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் சில மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. இந்த மாற்றத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

அதே சமயத்தில் இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்த இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. பங்களாதேஷ் நான்காவது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தோல்வி அடைந்தாலும் ஆஸ்திரேலியா அணி அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கின்ற காரணத்தினால் வெற்றி சதவீதம் பெரிய பாதிப்பை உருவாக்கவில்லை. இதனால் ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இந்த டெஸ்ட் போட்டியின் முடிவுகளுக்கு முன்னால் இருந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்

ஆஸ்திரேலியா – 61.11
இந்தியா – 54.16
தென்னாப்பிரிக்கா – 50.00
நியூசிலாந்து – 50.00
வங்காளதேசம் – 50.00
பாக்கிஸ்தான் – 36.66
இங்கிலாந்து – 15.00
மேற்கிந்திய தீவுகள் – 11.11
இலங்கை – 00.00

இந்த டெஸ்ட் போட்டியின் முடிவுகளுக்கு பின்னால் மாறிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்

ஆஸ்திரேலியா – 55
தென் ஆப்பிரிக்கா – 50
நியூசிலாந்து – 50
பங்களாதேஷ் – 50
இந்தியா – 43.33
பாகிஸ்தான் – 36.66
வெஸ்ட் இண்டீஸ் – 33.33
இங்கிலாந்து – 29.16
இலங்கை – 00.00

இதையும் படிங்க : “இன்னும் 4 மேட்ச்.. 4 சதம் அடிக்கனும்.. அதிர்ஷ்டத்தை குடுத்ததே இந்தியாதான்” – ஆட்டநாயகன் போப் பேட்டி

இதில் ஒரு விசித்திர நிகழ்வாக, இந்தியா இங்கிலாந்து போட்டியில் தோற்ற இந்தியாமூன்று இடங்கள் சரிந்து ஐந்தாவது இடத்திற்கும், வென்ற இங்கிலாந்து அணியும் ஒரு இடம் சரிந்து எட்டாவது இடத்திற்கும் வந்திருக்கின்றன. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற்ற வெஸ்ட் இன்டீஸ் எட்டாவது இடத்தில் இருந்து இங்கிலாந்தின் ஏழாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இதன் காரணமாக வெற்றி பெற்ற இங்கிலாந்தும் சரிந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.