“எழுதி வச்சுக்கோங்க.. உலகக்கோப்பை இந்த இந்திய பவுலருக்குதான்!” – பென் ஸ்டோக்ஸ் உறுதியான பேச்சு!

0
11955
Stokes

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடர் இந்திய அணிக்கு எவ்வளவு சிறப்பானதாக அமைந்திருக்கிறதோ, அதேபோல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சமிக்கும் அமைந்திருக்கிறது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா காயத்தின் காரணமாக விளையாட முடியாமல் போக, முகமது சமிக்கு கடைசி மூன்று ஆட்டங்களாக விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

- Advertisement -

இந்த மூன்று ஆட்டங்களிலும், இரண்டு போட்டிகளில் தலா ஐந்து விக்கெட்டுகள் மற்றும் ஒரு போட்டியில் நான்கு விக்கெட்டுகள் என மொத்தம் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி குவித்திருக்கிறார்.

மேலும் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்த விக்கெட்டுகளை வீழ்த்தியதின் மூலம் உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளராக மாறி இருக்கிறார். மேலும் உலகக்கோப்பை தொடரில் அதிக முறை 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளராகவும் மாறி இருக்கிறார். மேலும் சில பல சாதனைகளும் நேற்று செய்திருக்கிறார்.

இந்த உலகக் கோப்பையில் சமியின் மிகச் சிறந்த செயல்பாடு இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் லக்னோ மைதானத்தில் வெளிவந்தது. அந்த போட்டியில் நான்கு விக்கெட் வீழ்த்திய அவர், பென் ஸ்டோக்ஸ்க்கு வீசிய ஓவர் எல்லோராலும் பாராட்டப்பட்ட ஒன்றாக இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் முகமது சமி பற்றி கூறியுள்ள பென் ஸ்டோக்ஸ் “நான் சமிக்கு எதிராக நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். அவர் ஒரு அற்புதமான பந்துவீச்சாளர். நாங்கள் நேற்று இரவு அவரைப் பார்த்தோம். ஒட்டுமொத்த இந்திய அணியும் ஒரு ஸ்டேட் அப் கொண்டு வந்தார்கள். உண்மையில் அது மிகவும் தனித்துவமானது.

அவர் எல்லா போட்டியிலும் விளையாடவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் அவர் விளையாடிய போட்டிகளில், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அவர் கொண்டு வந்ததில்ல விக்கெட்டுகளின் எண்ணிக்கை நம்ப முடியாதது.

அவர் விக்கெட் பெறுவதற்கான வழிமுறைகளை கண்டுபிடித்திருக்கிறார். அவர் இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதில் எங்களுக்கு எதிராக செயல்பட்டதும் ஒன்று. அது அவருடைய சிறந்த ஸ்பெல்.

இந்த உலகக் கோப்பை தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக அவரே வருவார் என்று நினைக்கிறேன். மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் அவர் மிகச் சிறப்பாக இருந்தார் என்று பலரும் இனி கூறப் போகிறார்கள்!” என்று கூறி இருக்கிறார்!