“எழுதி வச்சுக்கோங்க.. பைனல்ல இந்த இந்திய பிளேயர்தான் பெரிய ஸ்கோர் அடிக்க போறார்!” – ஹர்பஜன் சிங் கணிப்பு!

0
1669
Harbajan

உலக கிரிக்கெட்டில் கடந்த இரண்டு மாதமாக எதிர்பார்த்து இருந்த நாள் நாளை மறுநாள் வரவிருக்கிறது. 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை 19 ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது.

இதுவரை ஐந்து ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியும், இரண்டு முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை கைப்பற்றிய இந்திய அணியும் மோதிக்கொள்ள இருக்கின்றனர்.

- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அசாத்தியமான திறமையை வெளிப்படுத்தி அருமையான முறையில் விளையாடுகிறது. இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பைப் பெற்ற எல்லா வீரர்களும் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

இதேபோல் ஆஸ்திரேலியா அணிக்கு முதல் இரண்டு ஆட்டங்கள் சரியாக அமையாத போதிலும், இதற்கு அடுத்து தொடர்ச்சியாக 8 போட்டிகளிலும் வென்று இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறது.

இரு அணிகளின் திறமையை ஒப்பிடும்போது தற்பொழுது இந்திய அணியின் திறமையை ஆஸ்திரேலியா அணியை விட கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது. இந்திய அணி மூன்று துறைகளிலும் சிறப்பான சமமான பலத்துடன் இருந்து வருகிறது.

- Advertisement -

அதே சமயத்தில் வெள்ளைப்பந்து போட்டிகளில் அன்றைய நாள் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்கள்தான் வெல்வார்கள். மேலும் பெரிய போட்டிகளில் உண்டாகும் அழுத்தத்தை சமாளிக்க கூடியவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும்.

இறுதிப் போட்டி குறித்து பேசி உள்ள ஹர்பஜன் சிங் கூறும் பொழுது ” விராட் கோலியும் முகமது சமியும் நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறார்கள். இவர்கள் இன்னும் ஒரு ஆட்டத்தில் விளையாட வேண்டும்.

போட்டி நடைபெற இருக்கும் மைதானம் கில்லுக்கு மிகவும் பிடித்த மைதானம். அவர் எப்பொழுதும் அகமதாபாத் மைதானத்தில் ஸ்கோர் செய்வார். இறுதிப் போட்டியில் அவர் பெரிய ரன்கள் எடுப்பார் என்று நான் கணிக்கிறேன்.

இந்தியா அச்சமற்ற கிரிக்கெட்டை விளையாட வேண்டும். இறுதி போட்டிகள் எப்பொழுதும் அழுத்தமான ஒன்று. யார் அழுத்தத்தை சிறப்பாக சமாளிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள். ஆஸ்திரேலியா அணி ஐந்து முறை கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. அவர்கள் பெரிய போட்டிகளில் ஒற்றுமையாக செயல்படுவார்கள்!” என்று கூறி இருக்கிறார்!