எழுதி வச்சுக்கோங்க.. உலகக்கோப்பையை இந்த 4 அணிகளில் ஒன்னு தான் ஜெயிக்கும் .. கிளன் மெக்ராத் கணிப்பு… இந்தியாவுக்கு இடம் இருக்கா.?

0
2047

2023 ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி தொடர் இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது. இது 13 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான உலகக்கோப்பை ஆகும். இந்தத் தொடரில் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.

ஐசிசி தரவரிசை அடிப்படையில் எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதம் ஜிம்பாப்வே நாட்டில் வைத்து உலக கோப்பை காண தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளும் இந்தியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பையில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளன.

- Advertisement -

மொத்தம் 48 போட்டிகளைக் கொண்ட இந்த உலகக்கோப்பை தொடர் 45 நாட்கள் நடைபெற இருக்கிறது. அக்டோபர் மாதம் 5ஆம் தேதி துவங்கும் உலகக் கோப்பை நவம்பர் மாதம் 19ஆம் தேதி இறுதிப் போட்டியுடன் முடிவடைகிறது. உலகக்கோப்பை போட்டிகள் ஆனது இந்தியாவில் நடைபெற இருப்பதால் ஆசிய நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக பல்வேறு பிரபலங்களும் கணித்து வருகின்றனர் .

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேத பந்துவீச்சாளரும் கிரிக்கெட் லெஜன்ட் கிளன் மெக்ராத் உலகக் கோப்பை போட்டியில் அரை இறுதி செல்ல வாய்ப்பிருக்கக் கூடிய அணிகளாக நான்கு அணிகளை பற்றிய தனது கணிப்பை பகிர்ந்திருக்கிறார். மேலும் இந்த முறை ஐம்பது ஓவர் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா தான் வெல்லும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசி இருக்கும் கிளன் மெக்ராத் ” 2023 ஆம் ஆண்டு உலக கோப்பையின் அறையில் போட்டிக்கு ஆஸ்திரேலியா அணி நிச்சயமாக தகுதி பெறுவதோடு அந்த அணி இந்த வருட உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடப்பதால் ஹோம் கண்டிஷனில் இந்திய அணியும் நிச்சயமாக அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என தெரிவித்திருக்கிறார் .

- Advertisement -

மேலும் நடப்புச் சாம்பியன் ஆன இங்கிலாந்து அணியும் உலகக் கோப்பையின் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என தெரிவித்திருக்கும் அவர் இங்கிலாந்து அணி கடந்த ஆறு வருடங்களுக்கு மேல் ஆக ஒரு நாள் போட்டி மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பாகிஸ்தான் அணியும் உலக கோப்பையின் ஆறறிவு போட்டிக்கு தகுதி பெறும் என தெரிவித்திருக்கிறார் .

ஆஸ்திரேலியா அணி இதுவரை ஐந்து முறை உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது இதில் மூன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி சிறப்பான பங்களிப்பை வழங்கியவர் மெக்ராத் என்பது குறிப்பிடத்தக்கது