“எழுதி வச்சுக்கோங்க.. டி20 உலக கோப்பை செமி பைனலில் ஆப்கான் விளையாடும்” – முன்னாள் கேப்டன் உறுதி!

0
50
Asgar

ஆசிய கண்டத்தில் புதிய கிரிக்கெட் அணியாக உருவாகி, யாரும் எதிர்பார்க்காத அளவிற்குஆப்கானிஸ்தான் அணியின் வளர்ச்சி இருக்கிறது.

நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி அசத்தியது.

- Advertisement -

மேலும் ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்கான வாய்ப்பு இருந்தது. அதை எட்டிப் பிடிப்பதற்கான தூரத்தில் இருந்து மேக்ஸ்வெல்லின் அபூர்வமான இரட்டை சதத்தால், அந்த வாய்ப்பை ஆப்கானிஸ்தான் இழந்தது.

ஆனாலும் கூட நீண்ட கிரிக்கெட் வடிவத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் அணியால், குறுகிய வடிவமான டி20 கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட முடியும். எனவே அவர்கள் நடக்க இருக்கின்ற டி20 உலக கோப்பை தொடரிலும் மிகச் சிறப்பான இடத்தை அடைய கடுமையாக போராடுவார்கள் என்பது உண்மை.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஆப்கன் அஸ்கர் கூறும் பொழுது “ஆப்கானிஸ்தான் அணி டி20 உலக கோப்பை அரை இறுதியில் விளையாடும். ஏனென்றால் ஆசியாவில் உள்ள சூழ்நிலையை போலவே அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் ஆடுகளங்கள் இருக்கும். அங்கு பந்தை நன்றாக திருப்ப முடியும். மேலும் பந்து கொஞ்சம் நின்று மெதுவாக வரும். ஒரு ஆப்கானிஸ்தான் அணிக்கு பெரிய சாதகமான விஷயம்.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி செயல்பட்ட விதத்திற்கு அவர்கள் டி20 உலக கோப்பை தொடரிலும் அரை இறுதிக்கு வர வேண்டும். ஆனால் இதற்காக அவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். மேலும் அவர்கள் தங்களை நம்பினால் ஆப்கானிஸ்தான் அணியால் சாதிக்க முடியாதது எதுவும் கிடையாது.

இந்த ஆப்கானிஸ்தான் அணி உள்நாடு மற்றும் வெளிநாட்டில் பல அணிகளுக்கு எதிராக தொடர்ந்து விளையாடி வந்தால், நடக்க இருக்கின்ற டி20 உலகக் கோப்பையில் வித்தியாசமான ஆப்கானிஸ்தான அணியை நாம் பார்க்கப் போவது உறுதி.

நாங்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு மிக நன்றாக தயாராக இருந்தோம். தற்பொழுது டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராக எங்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது.யார் விளையாடுவார்கள் என்று இப்பொழுது சொல்ல முடியாது. அனைவருக்குமே வாய்ப்பு இருக்கின்றது. முதலில் அணியை தயார் செய்ய வேண்டும். சில பெரிய போட்டிகளில் விளையாடி எங்கள் அணுகு முறையில் வேலை செய்தால் நாங்கள் இந்த உலகக் கோப்பை தொடரில் நிச்சயம் மிக சிறப்பாக செயல்பட்டு, பெரிய இடத்தை அடைவோம்” என்று கூறி இருக்கிறார்!