28 பந்துகளில் 65 ரன்கள்.. பேயாட்டம் ஆடிய குஜராத் ஜெயின்ட்ஸ் வீராங்கனை; 201 ரன்கள் அடித்து அபாரம்!

0
226

ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் ஜெயின்ஸ் அணி வீராங்கனை சோபியா டங்க்லே அதிரடியான ஆட்டத்தால் 200 ரன்கள் கடந்து, 202 ரன்களை பெங்களூர் அணிக்கு இலக்காக வைத்துள்ளது.

நடைபெற்று வரும் பெண்களுக்கான ப்ரீமியர் லீக் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பெண்கள் அணி மற்றும் குஜராத் ஜெயின்ஸ் அணி ஆகிய இரு அணிகளும் மோதி வருகின்றன. இதில் குஜராத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.

- Advertisement -

குஜராத் அணிக்கு மேக்னா மற்றும் டங்க்லே இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் மேக்னா தட்டு தடுமாறி விளையாடி 11 பந்துகளில் 8 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து உள்ளே வந்த ஹர்லின் தியோல் உடன் ஜோடி சேர்ந்த டங்க்லே, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார்.

பவுண்டரி மற்றும் சிக்ஸர் மழைகளாக பொலிந்த டங்க்லே 18 பந்துகளில் அரைசதம் அடித்து பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட்டில் சாதனையையும் படைத்தார். இவர் 28 பந்துகளில் 11 பவுண்டரிகள் மூன்று சிக்ஸர்கள் உட்பட 65 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

டங்க்லே உடன் சேர்ந்து தனது அதிரடியை ஆடிய ஹர்லின் தியோல் 45 பந்துகளில் 67 ரன்கள் அடித்தார். இதில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்கும்.

- Advertisement -

அடுத்ததாக உள்ளே வந்த வீராங்கனைகள் தங்களது பங்கிற்கு குறைந்த பந்துகளில் 10-15 ரன்கள் அடித்து கொடுக்க, 20 ஓவர்களில் குஜராத் ஜெயின்ஸ் அணியின் ஸ்கோர் ஏழு விக்கெடுகள் இழப்பிற்கு 201 ரன்கள் எட்டியது.

முதல் இரண்டு லீக் போட்டிகளில் படுதோல்வியை சந்தித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெண்கள் அணி, இந்த போட்டியிலும் இப்படி ரன்களை வாரி கொடுத்து சிக்கலில் இருக்கிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தானா மற்றும் நட்சத்திர வீராங்கனை சோபி டிவைன் இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கி விளையாடி விளையாடினார். கேப்டன் ஸ்மிருதி மந்தானா துரதிஷ்டவசமாக 18 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.