பெண்கள் ஐபிஎல்.. 15 ஓவரில் அபார சேஸ்.. பரிதாப குஜராத்தை புரட்டி எடுத்த உபி வாரியர்ஸ்

0
114
WPL

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் பெண்களுக்கான டபுள்யுபிஎல் டி20 லீக்கில் குஜராத் ஜெயின்ட்ஸ் மற்றும் உபி வாரியர்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

இந்த தொடரில் விளையாடும் ஐந்து அணிகளில் மும்பை, டெல்லி, பெங்களூர் ஆகிய மூன்று அணிகளும் வலிமையாக தெரிகின்றன. உத்திர பிரதேஷ் மற்றும் குஜராத் அணிகள் பலவீனமாகவே தெரிகின்றன.

- Advertisement -

இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற உபி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் ஜெயின்ட்ஸ் அணியின் துவக்க வீராங்கனைகள் வோல்வார்ட் 28, கேப்டன் மூனி 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து வந்த இந்திய வீராங்கனை ஹர்லின் தியோல் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அதிரடியாக விளையாடிய லிட்ச்ஃபீல்ட் 35, கார்டனர் 30 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு குஜராத் ஜெயின்ட்ஸ் அணி 142 ரன்கள் சேர்த்தது. உபி வாரியர்ஸ் தரப்பில் எக்கல்ஸ்டோன் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இலக்கை நோக்கி விளையாடிய உபி வாரியர்ஸ் அணிக்கு கேப்டன் அலேசா ஹீலி 33 ரன்கள் எடுக்க, நான்காவதாக வந்த கிரேஸ் ஹாரிஸ் ஆட்டம் இழக்காமல் அதிரடியாக ஒன்பது பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 60 ரன்கள் எடுக்க, 15.4 ஓவரில் எளிதாக இலக்கை எட்டி உபி வாரியர்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த தொடரில் நான்காவது போட்டியில் விளையாடிய உபி வாரியர்ஸ் அணிக்கு இது இரண்டாவது வெற்றியாகும். அதே சமயத்தில் மூன்றாவது போட்டியில் விளையாடிய குஜராத் ஜெயின்ட்ஸ் அணிக்கு இது மூன்றாவது தோல்வி ஆகும். குஜராத் அணி இந்த தொடரில் ஒரு போட்டியை கூட வெல்லாவிட்டால் அது ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!

இதையும் படிங்க : “ஹர்திக் பாண்டியா மேல ஏன் குறியா இருக்கிங்க.. அவர் தப்பு செய்யல இத பாருங்க” – இந்திய முன்னாள் வீரர் விளக்கம்

மேலும் கடந்த முறை மும்பையில் வைத்து முதல் சீசன் நடத்தப்பட்டது. இந்த முறை எல்லா போட்டிகளும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மும்பையில் கிடைத்த அதே வரவேற்பு தற்பொழுதுபெங்களூர் சின்னசாமி மைதானத்திலும் கிடைத்து வருகிறது.