WPL 2024.. 1 ரன்னில் ஆர்சிபிக்கு நடந்த பரிதாபம்.. ரிச்சா கோஸ் போராட்டம் வீண்.. திரில் போட்டியில் சோக முடிவு

0
115
WPL

தற்பொழுது இந்தியாவில் பெண்களுக்கான டி20 லீக் டபிள்யுபிஎல் இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.

இன்றைய போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. டெல்லி அணி முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தது. செபாலி வர்மா 18 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கேப்டன் மேக் லானிங் 26 பந்தில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து களத்திற்கு வந்த இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்டரிக்யூஸ் அதிரடியில் மிரட்டினார். மொத்தம் 36 பந்துகளை சந்தித்த அவர் 8 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உடன் 56 ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய அலைஸ் கேப்சி 32 பந்தில் 8 பவுண்டரிகள் உடன் 48 ரன்கள் அடித்தார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயித்த 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தரப்பில் ஸ்ரேயங்கா படேல் நான்கு ஓவர்களுக்கு 26 ரன்கள் மட்டும் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இலக்கை நோக்கி விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஐந்து ரண்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இன்னொரு துவக்க வீராங்கனை மொலினக்ஸ் 30 பந்தில் 33 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

அடுத்து வந்த ஆஸ்திரேலியாவில் அதிரடி வீராங்கனை எல்லீஸ் பெர்ரி 32 பந்துகளில் 49 ரன்கள் அதிரடியாக சேர்த்தார். நியூசிலாந்தின் சோபி டிவைன் 16 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். வர்காம் 6 பந்தில் 12 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில் இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பரான ரிச்சா கோஸ் களத்தில் இருந்தார். கடைசி ஓவருக்கு மொத்தம் 17 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. முதல் பந்தில் சிக்ஸர் அடுத்த அவர் இரண்டாவது பந்தை தவற விட்டு, மூன்றாவது பந்தில் ஒரு ரன்னும், நான்காவது பந்தில் இரண்டும் எடுத்தார்.

இதற்கடுத்து கடைசி இரண்டு பந்துகளில் வெற்றிக்கு எட்டு ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் ஐந்தாவது பந்தை ரிச்சா கோஸ் அபாரமாக சிக்ஸ் இருக்கு அடித்தார். இதனால் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி, ஒரு ரன் எடுத்தால் சூப்பர் ஓவர் என்கின்ற நிலை இருந்தது.

இதையும் படிங்க : “ரோகித் சர்மா சிறந்த கேப்டன் கிடையாது.. ஆனா ஸ்டோக்ஸ் அப்படி இல்ல” – இங்கிலாந்து கிரேம் ஸ்வான் பேட்டி

கடைசிப் பந்தை அடித்த ரிச்சா கோஸ் களைப்பின் காரணமாக ஓட முடியாமல் பரிதாபமாக ரன் அவுட் ஆனார். இதன் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சோகமாக ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.ரிச்சா கோஸ் 29 பந்தில் 51 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்திருக்கிறது.