“ரோகித் சர்மா சிறந்த கேப்டன் கிடையாது.. ஆனா ஸ்டோக்ஸ் அப்படி இல்ல” – இங்கிலாந்து கிரேம் ஸ்வான் பேட்டி

0
282
Rohit

2022ஆம் ஆண்டின் இறுதியில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் புதிய பயிற்சியாளராக பிரண்டன் மெக்கலம் இருவரும் பொறுப்பேற்ற பிறகு, அந்த அணி முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது. இந்த தோல்வி சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் ஏற்பட்டிருக்கிறது.

இங்கிலாந்து அணி அனுபவம் குறைவான சுழற் பந்துவீச்சாளர்களைக் கொண்டிருந்த போதும், அவர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகச் சிறப்பாகவே செயல்பட்டார்கள். ரவிச்சந்திரன் அஸ்வின் 26 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் இருக்கும் போது, அவருக்கு அடுத்தபடியாக இங்கிலாந்தின் டாம் ஹார்ட்லி 22 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். அஸ்வினை விட ஒரு இன்னிங்ஸ் குறைவாக விளையாடு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதே சமயத்தில் இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி ஒவ்வொரு போட்டியிலும் நல்ல துவக்கத்தை கொடுத்து வந்தார்கள். கடைசி ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பு வரை ஒவ்வொரு போட்டியிலும் இங்கிலாந்து அணி வெல்வதற்கான வாய்ப்புகள் ஆட்டத்தின் மத்தியில் இருந்தது.

இப்படியான நிலையில் இங்கிலாந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முதல் போட்டிக்குப் பிறகு, அடுத்து நடந்த மூன்று போட்டிகளிலும் அவர்கள் வெற்றி பெறுவதற்கு கிடைத்த வாய்ப்புகளை கொஞ்சமும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இங்கிலாந்து மிடில் ஆர்டரின் தோல்விதான் இங்கிலாந்து தொடரை இழப்பதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.

அதே சமயத்தில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் அணுகுமுறைக்கு எதிராக செய்திருந்த தவறுகளை திருத்திக் கொண்டு, இரண்டாவது போட்டியில் இருந்து மிகச் சிறப்பான திட்டங்களைக் களத்தில் செயல்படுத்தியது. ரோகித் சர்மா கேப்டனாக சிறப்பாக செயல்பட்டதோடு, பேட்ஸ்மேன் ஆகவும் அணிக்கு இரண்டு முக்கிய சதங்கள் அடித்து வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் ரோகித் சர்மா பற்றி பேசி உள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் கிரேம் ஸ்வான் கூறும் பொழுது ” நான் ரோகித் சர்மாவை சிறந்த கேப்டன் என்று நினைக்கவில்லை. ஏனென்றால் அவருடைய பந்துவீச்சாளர்கள்தான் அவருக்கான எல்லா வேலைகளையும் செய்தார்கள்.

ரோகித் நன்றாகத்தான் இருந்தார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவரை பந்துவீச்சாளர்கள்தான் போட்டியின் எல்லா இடங்களிலும் கேப்டனாக உள்ளே கொண்டு வந்தார்கள். அதே சமயத்தில் பென் ஸ்டோக்ஸ் மோசமான கேப்டன் கிடையாது.

இதையும் படிங்க : “சின்னச்சாமில செஞ்சுரி அடிக்கலாம்.. ஆனா சிஎஸ்கே சேப்பாக்கத்துல கோலி பாச்சா பலிக்காது” – ஹர்பஜன் சிங் பேட்டி

இங்கிலாந்து இந்த தொடரில் தோல்வி அடைந்திருக்கிறது. அவர்கள் தைரியமாக இல்லாததால் இந்த தோல்வி வந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன். உண்மையில் அவர்கள் பாஸ்பால் விளையாடவில்லை. விளையாடி இருந்தால் இந்த தொடர் இன்னும் நெருக்கமாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.