WPL 2024.. ஆர்சிபி ப்ளே ஆப்-க்கு தகுதி.. எல்லீஸ் பெரி ஆல்ரவுண்டிங் அசத்தலில் மும்பை இந்தியன்ஸ் தோல்வி

0
146
RCB

இன்று பெண்கள் டி20 கிரிக்கெட் லீக் டபிள்யுபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான மிக முக்கியமான ஆட்டத்தில் ஆர் சி பி அணி வலிமையான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது.

இதில் டாசில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் சரியாக தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி தனது துவக்க வீராங்கனை ஹைலி மேத்யூஸ் விக்கெட்டை 26 ரன்கள் எடுத்திருந்தபோது இழந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு பவர் பிளேவுக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் எல்லிஸ் பெரி பந்துவீச்சுக்கு வந்தார். இதற்குப் பிறகு தனது திறமையான வேகப்பந்து வீட்டில் ஒட்டுமொத்தமாக மும்பை இந்தியன்ஸ் அணி தடம் புரள வைத்தார்.

அவரது பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் வீராங்கனைகள் சஜனா 30, நாட் சிவியர் ப்ருண்ட் 10, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 0, அமலியா கெர் 2, அமன்ஜோத் கவுர் 4, பூஜா வஸ்ட்ரேக்கர் 6 ரன்கள் என வரிசையாக வெளியேறினார்கள்.

எல்லீஸ் பெரி மொத்தம் நான்கு ஓவர்கள் பந்து வீசி 15 ரன்கள் மட்டும் விட்டு தந்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆறு முக்கியமான விக்கெட்களை கைப்பற்றி, அந்த அணியின் ஒட்டுமொத்தமாக சரித்து விட்டார்.

- Advertisement -

வலிமையான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த போட்டியில் ஒட்டுமொத்தமாக 19 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்தது. இறுதியில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதற்கு அடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா 11, மோலினக்ஸ் 9, சோஃபி டிவைன் 4 ரன்கள் என வரிசையாக வெளியேறினார்கள். இதனால் ஆட்டத்தில் ஏதாவது திருப்புமுனை ஏற்படுமா என்று எதிர்பார்த்த நிலையில், பேட்டிங்கிலும் கலக்கிய எல்லீஸ் பெர 40 ரன்கள், ரிச்சா கோஸ் 36 ரன்கள் என இருவரும் ஆட்டம் இழக்காமல் எடுக்க, 15 ஓவர்களில் இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : “நான் இப்ப ரஞ்சி பைனல்ல சதம் அடிச்சது.. அவரை இம்ப்ரஸ் பண்ணதான்” – முசிர் கான் பேட்டி

இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் டபிள்யுபிஎல் இரண்டாவது சீசன் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. இந்த போட்டியில் மிக மோசமாக தோற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது என்கின்ற நிலையில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு, எல்லிஸ் தெரியும் ஆல் ரவுண்டிங் பெர்பார்மன்ஸ் பெரிய பலமாக அமைந்தது. அவரே ஆட்டநாயகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.