பெண்கள் ஐபிஎல்.. 12 ஓவரில் அசத்திய ஆர்சிபி.. ஸ்மிருதி மந்தனா அதிரடி ஆட்டம்

0
199
RCB

இந்திய கிரிக்கெட் வாரியம் இரண்டாவது சீசனாக நடத்தும் பெண்களுக்கான பிரான்சிசைஸ் டி20 லீக் டபிள்யுபிஎல், சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாசியில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கடந்த சீசனில் படுதோல்வி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த முறை மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது.

பேட்டிங் செய்ய வந்த குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு துவக்க வீராங்கனை ஹார்லின் டியோல் 22, ஹேமலதா 31, சினேகா ராணா 12 என மூவர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன் எடுத்தார்கள். மீதி 6 வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள்.

20 ஓவர் முடிவில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆர்சிபி தரப்பில் மோலினக்ஸ் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா 27 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 43 ரன்கள், மேக்னா 28 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உடன் 36* ரன்கள், எலிஸ் பெரி 14 பந்தில் 4 பவுண்டர்களுடன் 23* ரன்கள் எடுக்க, 12.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : “இந்தியா ஆஸ்திரேலியா டீம்ஸ் சலிப்பு.. இங்கிலாந்து நீங்கதான் செம்ம” – சேவாக் சர்ப்ரைஸ் பேச்சு

கடந்த சீசனில் முதல் வெற்றிக்கு கடுமையாக போராடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இந்த முறை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, தொடரை சிறப்பாக துவங்கி இருக்கிறது.