WPL 2024 பிளே ஆஃப்: போட்டிகள் நடக்கும் தேதி மற்றும் எந்த சேனலில் பார்க்கலாம்.. முழு விவரம்

0
105

மகளிர் பிரீமியர் டி20 லீக் கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் டெல்லி அணி முதல் இடத்திலும், நடப்பு சாம்பியன் மும்பை அணி இரண்டாவது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இத்தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய டெல்லி அணி எட்டு போட்டிகள் விளையாடி, ஆறு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தினை பிடித்துள்ளது. தற்போது புள்ளி பட்டியலில் நடப்பு சாம்பியன் மும்பை அணி ஐந்து வெற்றி மற்றும் மூன்று தோல்விகளுடன் இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளது.

- Advertisement -

மூன்றாவது இடத்தில் உள்ள பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 போட்டிகளில் நான்கு வெற்றி, நான்கு தோல்வி என மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்ட மீதமுள்ள இரு அணிகளான யூபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் அணிகள் முறையே ஐந்து தோல்வி மற்றும் ஆறு தோல்விகளுடன் வெளியேறியது. இதில் இரண்டாவது முறையாக குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சோகத்துடன் வெளியேறுகிறது.

இதில் பிளே ஆப் சுற்றைப் பொருத்தவரை இரண்டு போட்டிகள் மட்டுமே நடத்தப்படுகிறது. அதாவது புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ள டெல்லி அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே எலிமினேட்டர் போட்டி நடத்தப்படுகிறது.

இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியனாக அறிவிக்கப்படும். இந்த இரு போட்டிகளுக்கான தேதி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இப்படி இரவு 07.30 டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.

- Advertisement -

இதில் வெற்றி பெறும் அணி பைனலில் டெல்லியுடன் மோதும். இப்போட்டி மார்ச் 17ஆம் தேதி இதே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. இதன் நேரடி ஒளிபரப்பை ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் கண்டு களிக்கலாம். மற்றும் ஜியோ சினிமா ஆப்பை பயன்படுத்தி மொபைலில் பார்த்து மகிழலாம்.

இதையும் படிங்க: WPL 2024.. பெண்கள் கிரிக்கெட்டில் வீசப்பட்ட அதிவேக பந்து.. மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை புது சாதனை

மார்ச் 15: எலிமினேட்டர் – மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி (7:30 PM)

மார்ச் 17: இறுதி – டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிராக எலிமினேட்டர் வெற்றியாளர், அருண் ஜெட்லி ஸ்டேடியம், டெல்லி (7:30 PM)