WPL 2024.. ஒரே புள்ளியில் ஆர்சிபி மும்பை.. பிளே ஆஃப் போக ஒவ்வொரு அணியின் வாய்ப்புகள்.. முழு விபரம்

0
118

இந்தியாவில் நடைபெறும் பெண்கள் பிரீமியர் கிரிக்கெட் லீக் தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் சீசனைப் போலவே இரண்டாவது சீசனிலும் மக்களின் அமோக ஆதரவினைப் பெற்று வரும் நிலையில் மொத்தம் 20 போட்டிகளில் இதுவரை 11 போட்டிகள் நடைபெற்ற முடிந்துள்ளன.

இதில் டெல்லி அணி தொடக்க சீசனைப் போலவே இந்த சீசனிலும் மிகச் சிறப்பாக விளையாடி ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் வெற்றிகரமாக உள்ளது. இதில் முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக அடைந்த தோல்வியைத் தவிர உத்தரப்பிரதேசம்,குஜராத், பெங்களூர் மற்றும் இரண்டாவது சுற்றில் மும்பை அணிகளை வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் டெல்லி அணிக்கு அந்த அணியின் கேப்டன் லேர்னிங் முக்கியத்தூணாக விளங்குகிறார். மற்றும் பந்துவீச்சிலும் கேப் மற்றும் ஜானசன் அபாரமாக பந்து வீசி தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

புள்ளிப் பட்டியல் இரண்டாவது இடத்தில் உள்ள பெங்களூரு அணி 5 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. முதல் சீசனில் அடைந்த படுதோல்விக்கு இந்த சீசனில் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதில் பெங்களூருவில் நடைபெற்ற போட்டிகளில் அதிகப்படியான வெற்றிகளை பெற்றுள்ளது. அந்த அணியின் கேப்டன் மந்தனா மற்றும் தொடக்க ஆட்டக்காரர் டிவைன் ஆகியோர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மூன்றாவது இடத்தில் நடப்பு சாம்பியன் மும்பை அணி உள்ளது. தொடக்கத்தில் அதிரடியான வெற்றிகளை பெற்ற மும்பை அணி தற்போது சிறு சறுக்கல்களை சந்தித்து வருகிறது. மும்பை அணிக்கு ஆல் ரவுண்டர் அமிலியா கேர், மற்றும் கேப்டன் கவுர், யாஷிகா பாட்டியா ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

- Advertisement -

அடுத்த இடத்தில் உள்ள உத்தர பிரதேச அணி 5 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மீதி உள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். கடைசி இடத்தில் உள்ள குஜராத் அணிக்கு ஏறக்குறைய அரை இறுதி வாய்ப்பு முடிவடைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். புள்ளிகளின் அடிப்படையில் முதல் இடத்தில் உள்ள அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள அணிகள் எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இதையும் படிங்க: கோலி ரூட் ஸ்மித் கிடையாது.. சிஎஸ்கே பிளேயர்தான் என் பவுலிங் நல்லா விளையாடுவாரு – அஸ்வின் பேச்சு

இதில் டெல்லி அணி மீதமுள்ள மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றாலே நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். இதில் அடுத்தடுத்த இரு இடங்களில் உள்ள மும்பை மற்றும் பெங்களூரு அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் ரன் ரேட் இன் அடிப்படையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடிக்கும். ஆனால் இந்த இரு அணிகளும் மூன்றில் இரு போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. உத்தரப்பிரதேச அணிக்கு மற்ற அணிகளின் தோல்வி மற்றும் அந்த அணியின் ரன் ரேட் பொறுத்து பிளே ஆப் வாய்ப்பு முடிவு செய்யப்படும்.