WPL 2024.. ஆர்சிபி-க்கு அடிக்கும் லக்.. குஜராத் உபி மேட்சில் நடந்த செம டிவிஸ்ட்.. பிளே-ஆப் வாய்ப்பு எப்படி

0
171
WPL

தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 லீக் தொடர் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இதன் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று இருக்க, தற்பொழுது இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற ஒரு போட்டியில உபி வாரியர்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்று குஜராத் ஜெயின்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த அணி ஏற்கனவே ஆறு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மட்டுமே பெற்றிருந்தது. எனவே இதன் காரணமாக இந்த அணியின் பிளே-ஆப் வாய்ப்பு ஏற்கனவே முடிந்திருந்தது.

- Advertisement -

அதே சமயத்தில் உபி வாரியர்ஸ் அணி ஏழு போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளை வென்று இருந்தது. இதேபோல் நேற்று ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ஆர்சிபி அணியும் ஏழு போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளை வென்று இருந்தது. எனவே இரண்டு அணிகளும் ஆறு புள்ளிகள் பெற்று இருந்ததோடு, ஒரு ஆட்டம் கைவசம் வைத்திருந்தன. இதில் ஆர்சிபி அணி குஜராத் அணியை விட ரன் ரேட்டில் மேலே இருந்தது.

இந்த நிலையில் கடைசி ஆட்டத்தில் குஜராத் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிராக உபி வாரியர்ஸ் அணி பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்க விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயின்ட்ஸ் அணிக்கு கேப்டன் பெத் மூனி 52 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 72 ரன்களும், லாரா வோல்வார்ட் 30 பந்தில் 43 ரன்களும் எடுத்தார்கள். 20 ஓவர் முடிவில் குஜராத் ஜெயின்ட்ஸ் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி பிளே-ஆப் வாய்ப்புக்காக விளையாடிய உபி வாரியர்ஸ் அணிக்கு நடு வரிசையில் வந்த தீப்தி சர்மா 60 பந்துகளில் போராடி 88 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்து பேட்டிங்கில் ஏழாவதாக வந்த பூனம் 36 பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

- Advertisement -

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் உபி வாரியர்ஸ் அணியால் ஐந்து விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதற்கு அடுத்து எட்டு ரன்கள் வித்தியாசத்தில் பிளே-ஆப் வாய்ப்பை இழந்துவிட்ட குஜராத் ஜெயின்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஐந்து அணிகள் பங்குபெறும் இந்த தொடரில் மூன்று அணிகள் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைய முடியும். இதில் ஏற்கனவே மும்பை மற்றும் டெல்லி அணிகள் 7 போட்டிகளில் தலா ஐந்து போட்டிகளை வென்று 10 புள்ளிகள் உடன் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன.

புதிய செய்திகளுக்கு.. “இந்தியா சேவாக்கையும் நாங்க ஹைடனையும் கூட்டிட்டு வந்தா தாங்குவிங்களா.. தோத்ததே இதனால்தான்” – பிராட் ஹாக் பேச்சு

ஆர்சிபி அணி தனது கடைசி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டியில் மிக மோசமாக ஆர்சிபி தோற்றால் மட்டுமே உபி வாரியர்ஸ் அணியால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். இன்றைய போட்டியில் வென்று இருந்தால், ஆர்சிபி தனது அடுத்த போட்டியில் கட்டாயம் மும்பை அணியை வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது குஜராத் அணியால் ஆர்சிபிக்கு ஒரு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது!