அந்த பையன் நின்னு முடிச்சு கொடுத்திருப்பான்; பெருசா பிளான் பண்றேன்னு கோட்டைவிட்டதே அங்க தான் – தவானை கடுமையாக சாடிய சேவாக் சேவாக்!

0
425

டெல்லி அணியிடம் பஞ்சாப் கிங்ஸ் தோல்வி அடைந்தது, அவர்கள் எடுத்த தவறான முடிவில் தான் என்று கடுமையாக தவான் கேப்டன்ஷிப்பை சாடியுள்ளார் வீரேந்திர சேவாக்.

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 213 ரன்கள் குவித்தது

- Advertisement -

ஏற்கனவே டெல்லி அணி ஐபிஎல் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாது என்று உறுதியான பிறகு இந்த போட்டிக்கு வந்ததால் வெற்றி தோல்வி பெரிதளவில் டெல்லி அணியை பாதிக்காது. ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 12 போட்டிகளில் 12 புள்ளிகள் பெற்று மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும் ஒரு வாய்ப்பு இருக்கிறது என்கிற நோக்கில் களமிறங்கியது.

214 ரன்கள் இலக்கை சேஸ் செய்து கட்டாயம் நன்றாக வேண்டிய இடத்தில் பேட்டிங் செய்தது. ஆனால் பஞ்சாப் அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை என்றாலும், மிடில் ஆர்டரில் லிவிங்ஸ்டன் மற்றும் அதர்வா இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி வந்தனர்.

15 ஓவர்கள் முடிவில் அதர்வா 55 ரன்கள் அடித்து நல்ல பார்மில் இருந்தார். அந்த நேரத்தில் அதிரடியான வீரரை களமிறக்குகிறேன் என்கிற பெயரில் அதர்வா ரிட்டயர் சர்ட் கொடுத்து ஜித்தேஷ் சர்மா உள்ளே வந்தார்.

- Advertisement -

இந்த முடிவு பஞ்சாப் அணிக்கு சாதகமாக அமையவில்லை. ஜித்தேஷ் சர்மா டக்அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்தவர்களும் சொற்பரன்களுக்கு விக்கெட்டுகளை இழக்க 20 ஓவர்கள் முடிவில் 198 ரன்கள் மட்டுமே அடித்தது பஞ்சாப் அணி. இறுதி வரை லிவிங்ஸ்டன் போராடி வந்தார். இவர் 94 ரன்களுக்கு அவுட் ஆனார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி தோல்வியை தழுவியதால் இப்போது பிளே ஆப் வாய்ப்பு சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. கிட்டத்தட்ட பிளே-ஆப் செல்ல முடியாமல் வெளியேறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு அவர்களது ரன்ரேட் மோசமாக இருக்கிறது..

பஞ்சாப் கிங்ஸ் அணி நடுவில் எடுத்த இந்த தவறான முடிவால் அவர்கள் தோல்வியை தழுவி விட்டார்கள் என்று தவான் கேப்டன்ஷிப்பை கடுமையாக சாடியுள்ளார் வீரேந்திர சேவாக்.

“பஞ்சாப் கிங்ஸ் அணி தவறான நேரத்தில் தவறான கணக்கீடு செய்து விட்டது. பேட்ஸ்மேன் சரியாக பந்துகளை எதிர்கொள்ள முடியவில்லை என்றால் ஈகோ இல்லாமல் முன்னரே வெளியேறி இருக்க வேண்டும். மற்ற வீரர்கள் வந்து குறைந்த பந்துகளில் அடிக்க பார்த்திருப்பார்கள்.

இருப்பினும் கடைசி ஐந்து ஓவர்களில் நிறைய ரன்கள் அடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது ஆகையால் வீரர்கள் வந்த வேகத்தில் தவறான ஷாட்டுகள் விளையாடி ஆட்டம் இழந்துவிட்டார்கள். இந்த இடத்தில் தான் பஞ்சாப் அணி தவறு செய்துவிட்டது. பேட்ஸ்மேன் அணியின் நல்லதற்காக முன்னரே இந்த முடிவை எடுத்திருக்கலாம். குறைந்தபட்சம் இலக்கை நெருங்கி இருக்க முடியும்” என்று கருத்து தெரிவித்தார் ஷேவாக்.

“இந்த இடத்தில் தவான் என்ன செய்ய வேண்டும் என்று கணக்கீடு செய்து, எப்போது என்ன செய்யலாம் என்கிற மனநிலையில் இருந்திருக்க வேண்டும். அவரது கேப்டன்ஷிப் சரியாக எடுபடவில்லை.” என்றார்.