உங்கள் வீரர்களும் பிக்பாஸ் லீக் இங்கு விளையாடி இருந்தால் இப்படி ஆகியிருக்குமா? – ராகுல் டிராவிட் நச் பதில்!

0
4210
Rahul Dravid

இன்று ஆஸ்திரேலியாவின் அடிலைடு மைதானத்தில் எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்தது!

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஏமாற்ற, பிறகு வந்த விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா அபாரமாக அரைசதம் அடித்து 168 என்ற சவாலான ஸ்கோரை இந்திய அணிக்கு தந்தார்கள்!

- Advertisement -

ஆனால் இதற்கு பிறகு களம் இறங்கிய இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் விக்கெட்டை தராமல் 16 ஓவர்களில் இந்த இலக்கை விரட்டி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் இங்கிலாந்து அணியை அழைத்துச் சென்றார்கள்!

ஒரு பக்கம் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் ஆட்டம் சிறப்பாக இருந்த பொழுது அவர்களின் பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது. ஆனால் இந்திய அணியின் துவக்க பேட்டிங்கும் சரியில்லை மொத்த பந்துவீச்சும் சரியில்லை. இதனால் இந்திய அணிக்கு பத்து விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி வந்தது!

தோல்விக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம், இந்திய வீரர்கள் உலகில் மற்ற நாடுகளில் நடக்கும் டி20 லீக்குகளில் கலந்து விளையாடினால் அவர்களால் இந்த மாதிரியான சூழல்களுக்கு உடனே தகவமைந்து நன்றாக விளையாட முடியும் என்று கேள்வி முன்வைக்கப்பட்டது.

- Advertisement -

இதற்கு பதில் அளித்த ராகுல் டிராவிட்
” இங்கு வந்து பிக்பாஸ் லீக்கில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடியது எந்தச் சந்தேகமும் இல்லை. இது இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் கடினமான விஷயம். இதுபோன்ற லீக்குகள் எங்களுக்கு நாங்கள் உச்சகட்டமான கிரிக்கெட் தொடர்களில் விளையாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் நடக்கும். எனவே இந்திய கிரிக்கெட்டில் உள்ள பலர் இப்படியான தொடர்களை தவற விடுகிறார்கள். ஆனால் இது குறித்தெல்லாம் எந்த முடிவையும் இந்திய கிரிக்கெட் வாரியம்தான் எடுக்க வேண்டும்” என்று கூறினார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” எங்கள் வீரர்களுக்கு ஒரு மாதிரியான தேவைகள் இருக்கும். அவர்களை இப்படியான லீக்குகளில் வெளியே விளையாட விட்டால். எங்களின் உள்நாட்டு கிரிக்கெட், ரஞ்சி கிரிக்கெட் அழிந்து விடும். அதாவது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் இருக்காது. இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இப்படியான கடினமான சூழலை தான் இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்கொள்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்!

மேலும் தொடர்ந்து பேசிய ராகுல் டிராவிட் ” எங்கள் சீசன் நடுப்பகுதியில் விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களிடம் வெளியில் லீக் விளையாட கேட்கிறார்கள். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் எப்படி அழிந்திருக்கிறது என்பதை நாம் பார்த்தோம். அந்த வகையில் அந்த வழியில் இந்திய கிரிக்கெட் போவதை நாங்கள் விரும்பவில்லை. இது ரஞ்சி டிராபி மற்றும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் பாதிக்கும். எங்கள் இளைஞர்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது கிரிக்கெட்டுக்கும் எங்களுக்கும் மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்!