“கவலைப்படாதிங்க.. எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை.. தெளிவா இருக்கோம்.. கப் கன்பார்ம்!” – ரோகித் சர்மா பேச்சு!

0
2459
Rohit

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கு கேப்டன் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை.

இன்று நடைபெற்ற தொடரில் மூன்றாவது போட்டியில் ரோகித் சர்மா அணிக்கு திரும்ப வந்து கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

- Advertisement -

இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது. ராஜ்கோட் மைதானத்தில் இது அதிகபட்ச ரன்களாக பதிவாகியது.

இதற்கு அடுத்து இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 57 பந்துகளில் அதிரடியாக 81 ரன்கள் குவித்து நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். விராட் கோலியும் சிறப்பாக விளையாடி 56 ரன்கள் எடுத்தார். ஆனால் அடுத்து வந்தவர்கள் சரியாக விளையாடாததால் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆனாலும் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இருந்ததால் தொடரை கைப்பற்றியது.

போட்டிக்கு பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறும் பொழுது “நான் எல்லா வழிகளிலும் செல்ல விரும்புகிறேன். நான் அடித்த விதத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கடந்த ஏழு எட்டு போட்டிகளில் நாங்கள் மிக நன்றாக விளையாடினோம். வெவ்வேறு சூழ்நிலைகள் மற்றும் வெவ்வேறு அணிகளுக்கு எதிராக நாங்கள் சவால் செய்யப்பட்டோம். அந்தச் சவால்களுக்கு நாங்கள் நன்றாகவே பதில் அளித்தோம் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

துரதிஷ்டவசமாக இன்று நாங்கள் விரும்பிய முடிவு கிடைக்கவில்லை. பும்ரா குறித்து நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதைவிட அவர் உடல் ரீதியாக மனரீதியாக எப்படி உணர்கிறார்? என்பது முக்கியம். அதுவே நமக்கு நல்லது.

ஒட்டுமொத்தமாக 15 வீரர்களை எடுத்துக் கொண்டால், எங்களுக்கு என்ன வேண்டும் என்பது நன்றாகத் தெரியும். நாங்கள் எதிலும் குழப்பம் அடையவில்லை. ஒரு குழுவாக நாங்கள் எங்கு செல்கிறோம் என்பது நன்றாகவே தெரியும்.

இது ஒரு குழு விளையாட்டு. இதில் எல்லா வீரர்களும் வந்து தங்களது பங்களிப்பை செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவ்வாறு செய்தால் சாம்பியன்ஷிப்பை வெல்வோம். இனி உடலை கவனித்து அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு புத்துணர்ச்சியோடு இருக்க முயற்சி செய்ய வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!