உலகக்கோப்பை குவாலிபயர் அப்டேட்: இலங்கை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!… ஸ்காட்லாந்து இமாலய வெற்றியால் மற்ற அணிக்கு சிக்கல்!

0
1059

உலகக்கோப்பை குவாலிபயர் மல்லிகைப் போட்டிகளில் இலங்கை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்து அணி தங்களது இமாலய வெற்றியை சர்வதேச கிரிக்கெட்டில் பதிவு செய்துள்ளது.

ஜிம்பாப்வேயில் உள்ள பிரபல ஹராரே மைதானத்தில் நேற்றைய தினம் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு நடைபெற இருந்த போட்டிகள் மற்றொரு மைதானத்திற்கு மாற்றப்பட்டன.

- Advertisement -

உலகக்கோப்பை குவாலிஃபயர் சுற்றில் இன்று நடைபெற்ற முதலில் போட்டியில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஓமன் மற்றும் இலங்கை இரண்டு அணிகளும் மோதின. இதில் ஓமன் அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஓமன் அணிக்கு துவக்கம் முதலே விக்கெட்டுகள் சரிந்து வந்தன. எவருமே பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. நான்கு வீரர்கள் டக் அவுட், மூன்று பேர் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தனர் வணிந்து ஹசரங்கா 7.2 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெடுகளை கைப்பற்றினார். லஹிரு குமரா இரண்டு வீக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஓமன் அன்னிக்கு அதிகபட்சமாக அயான் கான் 41 ரன்கள், ஜிதந்தர் சிங் 21 ரன்கள் அடித்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டம் இழக்க, ஓமன் அணி 98 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த எளிய இலக்கை துரத்திய இலங்கை அணி துவக்க வீரர்கள் கருநரத்தினே மற்றும் பத்தும் நிஷன்கா இருவரும் இறுதிவரை நின்று விக்கெட் இழக்காமல் போட்டியை முடித்து கொடுத்தனர்.

- Advertisement -

15 ஓவர்களில் 100 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. கருநரத்தினே 61 ரன்கள், பதும் நிஷன்கா 37 ரன்கள் அடித்து களத்தில் நின்றனர்.

இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரண்டு அணிகளும் மோதின. இதில் ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

டாப் ஆர்டர் பேட்ஸ்மன்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்த பிறகு கேப்டன் பெர்ரிங்டன் பொறுப்பை எடுத்துக்கொண்டு சதம் அடித்தார். இவர் 127 ரன்களுக்கு அவுட் ஆகினார். அடுத்த அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்க் வாட் 14 ரன்கள் அடித்தார். ஸ்காட்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் அடித்தது.

283 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்திய ஐக்கிய அரபு அமீரக அணிக்கு ஆரம்பம் முதல் எதுவுமே சீராக அமையவில்லை. துவக்க வீரர் வாசிம் 36 ரன்கள் அடித்தார். அதற்கு அடுத்து அதிகபட்சமாக பஸில் ஹமீது 30 ரன்கள் அடித்தார்.

மற்ற வீரர்கள் எவரும் நிலைத்து நிற்காமல் வெளியேறியதால், 35.3 ஓவர்களில் 171 ரன்கள் மட்டுமே அடித்து ஐக்கிய அரபு அமீரக அணி ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் ஸ்காட்லாந்து அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.