டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்.. இந்தியாவை முந்திய பாக் பங்களாதேஷ்.. ஒரே ஒரு தோல்வியால் பெரும் பின்னடைவு.!

0
1676

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 245 ரன்கள் சேர்த்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணி டீன் எல்கரின் அபார சதத்தால் 408 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் காரனமாக தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 163 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி வெறும் 131 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் தென்னாப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

- Advertisement -

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல் இம்முறையும் இந்திய அணியால் தென்னாப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் திரும்பவுள்ளது. இதனால் டெஸ்ட் வரலாற்றில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணி தோல்வியை தொடர்ந்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலிலும் இந்திய அணி பின்னடைவை சந்தித்துள்ளது. இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கைப்பற்றியதால், இந்திய அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தது. முதலிடத்தில் பாகிஸ்தான் அணி 2 வெற்றிகளுடன் இருந்தது.

தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தாலும், வெற்றி சதவிகிதம் படி முதலிடத்தில் நீடித்தது. இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததன் மூலமாக ஒரு வெற்றி, ஒரு டிரா மற்றும் ஒரு தோல்வி காரணமாக 44.44 வெற்றி சதவிகிதத்துடன் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு இது முதல் போட்டியாகும். முதல் போட்டியிலேயே வெற்றிபெற்றதன் மூலமாக 12 புள்ளிகள் பெற்று 100 சதவிகித வெற்றியுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இரண்டாவது இடத்தில் 61.11 சதவிகிதத்துடன் பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

தொடர்ந்து நியூசிலாந்து அணி 3வது இடத்தில் 50 சதவிகித வெற்றிகளுடன், 4வது இடத்தில் வங்கதேச அணி 50 சதவிகித வெற்றியுடனும் உள்ளது. அதேபோல் ஆஷஸ் தொடரை சமன் செய்த ஆஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு கீழ் 6வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.