பாக். தோல்வியால் இந்தியாவுக்கு சாதகம்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதிபெற என்ன வழி?

0
3622

2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு கிட்டத்தட்ட பறிபோனது.   முல்தானில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்திடம் ஏற்பட்ட தோல்வியின் மூலம் அந்த அணி   2-0 என்ற கோல் கணக்கில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இழந்தது.இந்த நிலையில் சட்டோகிராமில் பங்களாதேஷுக்கு எதிராக இந்தியாவின் முதல் டெஸ்ட் நாளை தொடங்குகிறது. இதனை தொடர்ந்து  வெள்ளிகிழமை பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் கராச்சியில் மூன்றாவது டெஸ்ட் விளையாடுவார்கள்.

இந்தியா தற்போது WTC அட்டவணையில் நான்காவது இடத்தில் உள்ளது
இது 52.08%வெற்றி சதவீதம் ஆகும். மறுபுறம், பாகிஸ்தான் 42.42%உடன் ஆறாவது இடத்தில் உள்ளது. இந்தியாவை விட முன்னதாக அணிகள் மூன்றாவது இடத்தில் இலங்கை 53.33% சதவிதத்துடனும், இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்கா 60%சதவிதத்துடனும், முதலில் ஆஸ்திரேலியா 75% சதவிதத்துடனும் உள்ளன.

முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணியே இறுதிப் போட்டிக்கு முதல்  தகுதி பெறும். இந்தியாவை பொறுத்தவரை இன்னும் ஆறு போட்டிகள் உள்ளன. பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு, மற்றும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சொந்த மண்ணில் நான்கு போட்டிகள் உள்ளன. இந்திய அணி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்ற இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். வங்கதேசத்துக்கு எதிராக தொடரை முழுமையாக இந்தியா வென்று விட்டால் அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஒரு போட்டியில் தோற்றால் கூட இந்தியாவுக்கு இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.

இதே போன்று  ஆஸ்திரேலியா அதன் சொந்த மண்ணில் வரும் 17 ஆம் தேதி முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. இதில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்காவின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு குறைந்துவிடும்.அது இந்தியாவுக்கு சாதகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.