“இந்தியா உலக கோப்பையை வெல்லுமா? தப்பா நினைக்காதிங்க ஓபனா சொல்றன்..!” – கபில்தேவ் வெளிப்படையான பேச்சு!

0
4222
Kapil

இந்திய அணி மீதான மற்றவர்களின் நம்பிக்கை என்பதை, ஆசியக் கோப்பைக்கு முன்பு ஆசியக் கோப்பைக்கு பின்பு எனப் பிரிக்கலாம்!

ஆசியக் கோப்பைக்கு வருவதற்கு முன்னால் இந்திய அணி மீது நிறைய சந்தேகங்களும் கேள்விகளும் இருந்தது. கூடவே ஆசியக் கோப்பை அணி தேர்வு பற்றிய விமர்சனங்களும் இருந்தது.

- Advertisement -

இதையெல்லாம் சுமந்து கொண்டுதான் இந்திய அணி நடந்து முடிந்த ஆசியக் கோப்பை தொடரை சந்தித்தது. அணியின் முக்கிய வீரர்கள் அத்தனை பேரும் உடல் தகுதியோடு இருந்தால், இந்திய அணியால் என்ன செய்ய முடியும் என்று இந்த ஆசியக் கோப்பை தொடரில் காட்டியது.

நடந்து முடிந்த ஆசியக் கோப்பை தொடரில் 128 ரன்களுக்கு பாகிஸ்தானை நிறுத்திய இந்தியா, இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வெறும் 50 ரன்கள் சுருட்டி அனாயசமாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதன் காரணமாக இந்திய அணியின் தன்னம்பிக்கை மிகவும் அதிகரித்து இருக்கிறது.

தற்பொழுது உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்பு குறித்து பேசி உள்ள கபில்தேவ் “தாங்கள் முதல் நான்கு இடங்களுக்குள் வர முடியுமானால் அது முக்கியமான ஒரு விஷயமாக இருக்கும். மேலும் அது அதிர்ஷ்டம் எல்லாவற்றையும் உள்ளடக்கியதான ஒன்று.

- Advertisement -

இந்த உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு எங்களுக்குத் தான் இருக்கிறது என்று இப்பொழுதே சொல்ல முடியாது. எங்கள் அணி நல்லது என்று ஒரு பக்கமும், எங்கள் அணி இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று இன்னொரு பக்கமும் சொல்கிறது.

எனக்கு எங்கள் அணி பற்றி தெரியும். மற்ற அணிகள் பற்றி தெரியாது. எனவே இந்திய அணியை பொறுத்தவரையில் நான் வெற்றாக பதில் சொல்வது நன்றாக இருக்காது. இந்திய அணி விளையாடி சாம்பியன்ஷிப் வெல்ல தயாராக உள்ளது. அவர்கள் இதற்கு ஆர்வத்துடன் விளையாட வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

எந்த அணியிலும் முக்கியமான இரண்டு வீரர்கள் காயம் அடைந்தால் அது அந்த அணியின் அதிர்ஷ்டத்தை பாதிக்கிறது. அதனால்தான் அதிர்ஷ்டம் தேவைப்படுகிறது. ஏனென்றால் உங்கள் முக்கிய வீரர்கள் காயம் அடைந்தால், அணியின் சமநிலை பாதிக்கப்படும்.

அணிக்கு தேர்வு செய்யாதப்படாத வீரர்களை பற்றி பேசி எந்த பயனும் கிடையாது. எல்லோருக்குமே அவரவர் கருத்து உள்ளது. தேர்வாளர்கள் நம்மை விட சிறந்தவர்கள். ஏனென்றால் அவர்கள் மிக நன்றாக யோசித்துதான் அணியைத் தேர்வு செய்கிறார்கள். அவர்கள் தங்களுடைய வேலையை நல்லபடியாகவே செய்திருக்கிறார்கள். அவர்களை அப்படியே விட்டு விடுங்கள். புள்ளி விபரங்களை அவர்களை நோக்கி காட்டுவது என்பது எளிதான வேலை!” என்று கூறி இருக்கிறார்!