உலக கோப்பையில் இந்திய அணிக்கு இது தலைவலிதான் – அஜித் அகர்கர் வெளிப்படையான பேச்சு!

0
961
Agrkar

இந்தியாவில் நடக்க இருக்கும் 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு சில தலைவலிகள் இருக்கவே செய்கிறது. அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணி எல்லா கட்டங்களையும் டிக் செய்த அணி கிடையாது!

இந்த உலகக் கோப்பை இந்திய அணியை எடுத்துக் கொண்டால், இடதுகை வேகப்பந்துவீச்சாளர், லெக் மற்றும் ஆப் ஸ்பின்னர் என மூன்று வகையான பந்துவீச்சு விருப்பங்கள் பந்துவீச்சு துறையில் இல்லை.

- Advertisement -

அதே சமயத்தில் விளையாடும் அணியில் எந்த 11 வீரர்கள் இடம் பெறுவார்கள் என்பதும் உறுதி இல்லாமல் இருக்கிறது. மேலும் ஒவ்வொரு வீரர்களுக்கும் தனிப்பட்ட ரோல் என்ன என்பது குறித்தும் தெளிவுகள் இல்லை.

இந்தக் காரணங்களால், ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால் இந்த உலகக் கோப்பை தொடருக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்திய அணியைப் பொறுத்தவரை தலைவலி அதிகமாகவே இருக்கிறது.

அதே சமயத்தில் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்திற்கு சில நல்ல தலைவலிகளும் இருக்கவே செய்கிறது. அதில் முக்கியமான ஒன்று தற்பொழுது சிறப்பான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் இஷான் கிஷானை விக்கெட் கீப்பராக விளையாட வைப்பதா? இல்லை ஐந்தாவது இடத்தில் கே.எல். ராகுலை விக்கெட் கீப்பராக விளையாட வைப்பதா? என்கின்ற குழப்பம் இருந்து வருகிறது.

- Advertisement -

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறும் பொழுது “அதாவது இது ஒரு நல்ல தலைவலி. இஷான் ஒரு அழகான நல்ல இன்னிங்ஸ் விளையாடினார். அதே சமயத்தில் அவர் பேட்டிங்கில் துவக்க வீரராக வரக்கூடியவர். இன்னொரு பக்கத்தில் இந்திய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக, ஐந்தாவது இடத்தில் கே.எல் ராகுல் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். இப்போது இவர்களில் இருவரில் யாரை தேர்வு செய்வது? என்பது இந்திய அணி நிர்வாகத்திற்கு ஒரு நல்ல தலைவலியாகவே இருந்து வருகிறது. குறிப்பிட்ட நாளில் நாம் தேர்வு செய்ய இரண்டு சரியான வீரர்கள் இருப்பது நல்லதுதான்!” என்று கூறி இருக்கிறார்!

இதே கேள்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும் பொழுது
“இருவருமே விளையாடும் அணியில் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லாமல் கிடையாது, இருக்கிறது. தேர்வு என்பது எதிரணி மற்றும் ஒரு குறிப்பிட்ட வீரரின் ஃபார்ம் மற்றும் அவர் அழுத்தத்தில் எப்படி செயல்படக் கூடியவர் என்பதை பொறுத்து அமைகிறது.

ஏனெனில் நீங்கள் ரன்களை பெறுகிறீர்கள் என்றால் அந்த ரன்கள் உங்களுக்கு எப்படி வந்தது என்பது முக்கியம். இசானை பாருங்கள் அவர் ஒரு அழுத்தமான நேரத்தில் மிக முக்கியமான ரண்களை கொண்டு வந்தார். அவரது நம்பிக்கை அபாரமாக இருக்கிறது. அவர் மிடில் வரிசையில் இடதுகை வீரராக நமக்கு ஒரு புதிய பரிணாமத்தை தருகிறார்!” என்று கூறியிருக்கிறார்!