உலக கோப்பை தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு.. நட்சத்திர வீரர் ரிட்டயர்ட் முடிவு.. தொடரும் பரபரப்பு!

0
1397
SA

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு கிரிக்கெட் ரசிகர்களிடம் எப்பொழுதும் அமோக வரவேற்பு இருக்கும். பல கிரிக்கெட் நினைவுகளை கிளறி விடும் தொடராக ஒருநாள் கிரிக்கெட் தொடர் அமையும். இதற்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது!

இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் முதல்முறையாக முழுமையாக நடக்கிறது. அக்டோபர் 5ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் துவங்கும் உலகக் கோப்பை தொடர், இதே மைதானத்தில் நவம்பர் 19ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.

- Advertisement -

மொத்தம் இந்த தொடரில் 10 அணிகள் பங்கு பெறுகின்றன. இதில் ஐந்து ஆசிய கண்டத்துக்கு அணிகள் இருக்கின்றன என்பது சிறப்பு. இந்தத் தொடருக்கு நேரடியாக எட்டு அணிகள் தகுதி பெற்றன. மீதி இரண்டு இடங்களுக்காக நடத்தப்பட்ட தகுதி சுற்றில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் தேர்வாகி இருக்கின்றன.

இந்த நிலையில் உலகக் கோப்பையில் யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சிகரமான முடிவுகளை வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு அணியான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இன்று உலகக் கோப்பைக்கான தனது பதினைந்து பேர் கொண்ட அணியை அறிவித்து இருக்கிறது.

அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 15 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக இருக்கிறார். விக்கெட் கீப்பர்களாக ஹென்றி கிளாசன் மற்றும் குயிண்டன் டி காக் ஆகியோர் இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சு துறைக்கு அதிவேக அன்ரிச் நோர்க்கியா மற்றும் அனுபவ ககிசோ ரபாடா ஆகியோர் இருக்கிறார்கள்.

- Advertisement -

கடந்தமுறை நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை தவிர மற்ற எல்லா ஒருநாள் உலகக் கோப்பையிலும் கோப்பையை வெல்லும் அணியாக தென் ஆப்பிரிக்க அணி கணிக்கப்பட்டே வந்திருக்கிறது. அந்த அளவிற்கு அந்த அணி பலமானதாக இருந்திருக்கிறது. இந்த முறை அப்படியான எதிர்பார்ப்புகள் இல்லை. ஆனாலும் போட்டி அளிப்பதில் மிக சவாலான ஒரு அணியாக இருக்கும்.

மேலும் அறிவிக்கப்பட்ட அணியில் இடம் பெற்றுள்ள அனுபவ துவக்க ஆட்டக்காரரும் மற்றும் விக்கெட் கீப்பருமான குயின்டன் டி காக் வருகின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரோடு, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி: டெம்பா பவுமா, டேவிட் மில்லர், ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ யான்சன், ஹென்ரிச் கிளாசென், சிசண்டா மகலா, கேஷவ் மஹாராஜ், எய்டன் மார்க்ரம், லுங்கி கிடி,அன்ரிச் நார்ட்ஜே, ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி.