உலக கோப்பை.. கேன் வில்லியம்சனுக்கு 2 வார கெடு விதித்த நியூசிலாந்து.. என்ன நடந்தால் வாய்ப்பு கிடைக்கும்.?

0
1607

இந்தியாவில் நடைபெற இருக்கும் 13ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்காக உலகக் கோப்பையில் இருக்கும் 10 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் உலகக் கோப்பையில் பங்கேற்க இருக்கும் வீரர்களின் பட்டியலை ஐசிசிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் அனைத்து அணிகளிடமும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

கடந்த உலகக் கோப்பை போட்டியில் கேப்டனாக இருந்து நியூசிலாந்து அணியை உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி வரைக்கும் வழிநடத்திச் சென்றவர் கேன் வில்லியம்சன். நூலிலை இடைவெளியில் உலகக் கோப்பையை தட்டிச்செல்லும் வாய்ப்பை நியூசிலாந்த அணி 2019 ஆம் வருடம் இறந்தது என்பது நாம் அறிந்ததே. மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை சந்தித்தது நியூசிலாந்து.

- Advertisement -

நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான கேன் வில்லியம்சன் இந்த வருட ஐபிஎல் தொடக்கப் போட்டியின் போது முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் தொடரில் இருந்து வெளியேறினார் . சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியின் போது எல்லை கோடு அருகே பில்டிங் செய்திருந்த அவர் பந்தை தடுக்க முற்படும்போது முழங்காலில் காயம் ஏற்பட்டது . இதனைத் தொடர்ந்து வெளியேறிய அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் ஓய்வு பெற்று வந்தார் .

தற்போது ஓய்வில் இருந்து திரும்பி இருக்கும் அவர் வலை பயிற்சியை தொடங்கி விளையாடி வருகிறார் . மேலும் உலகக்கோப்பை காண நியூசிலாந்து அணியில் அவர் இடம்பெறுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கிரே ஸ்டெட் தெரிவித்திருக்கிறார். இதனால் நியூசிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நியூசிலாந்து அணியினர் புதிய உற்சாகத்தில் இருக்கின்றனர்.

இது தொடர்பாக நியூசிலாந்து மீடியாவிற்கு பேட்டியளித்திருக்கும் நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ” நாங்கள் இன்னும் உலகக் கோப்பை அணியை அறிவிப்பதற்கு இரண்டு வார காலம் இருக்கிறது . எங்களால் முடிந்தவரை அவருக்கு இரண்டு வார கால அவகாசம் கொடுத்திருக்கிறோம் . அவர் முழுவதுமாக போட்டிகளுக்கு தயாராகும் நிலையில் இருக்கிறார் . மேலும் வலை பயிற்சியில் பேட்டிங்கிலும் நன்றாக ஈடுபடுகிறார். இது அணிக்கு சாதகமான விஷயம்” என்று தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முக்கியம் என்றாலும் உலகக்கோப்பை க்கு பிறகான கேன் வில்லியம்சனின் கிரிக்கெட் கேரியரும் மிகவும் முக்கியம் . எனவே உலகக்கோப்பை மட்டுமே கருத்தில் கொண்டு அவரை அவசரப்படுத்துவது சரியாக இருக்காது. இந்த இரண்டு வார காலத்திற்குள் அவர் உடல் தகுதியை பெற்றால் நிச்சயமாக நியூசிலாந்தின் உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவார்” என்று தெரிவித்தார்.

தற்போது அறுவை சிகிச்சைக்கு பிறகு பயிற்சிகளை தொடங்கி இருக்கும் வில்லியம்சன் நியூசிலாந்து அணியுடன் இணைந்து இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது . இன்னும் இரண்டு வார காலத்திற்குள் தன்னுடைய உடல் தகுதியை நிரூபிக்க தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் கேன் வில்லியம்சன். இதுவரை 6500 ரன்கள் ஒரு நாள் போட்டிகளில் எடுத்திருக்கிறார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பையின் துவக்க போட்டியே நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே குஜராத்தின் அகமதாபாத் நகரில் வைத்து அக்டோபர் ஐந்தாம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.