உலக கோப்பை இந்திய அணி அறிவிப்பு.. சாம்சன் தமிழக வீரர்களுக்கு இடமில்லை.. ஆல்ரவுண்டருக்கு இடம்!

0
2441
ICT

இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான அணியை அறிவிப்பதற்கு இன்றைய நாளே கடைசி நாளாகும்!

இந்த நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களுடைய ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அணியை ஏற்கனவே அறிவித்து இருக்கின்றன.

- Advertisement -

உலகக் கோப்பையை நடத்தும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மட்டுமே தமது அணியை இப்பொழுது வரை அறிவிக்காமல் இருந்து வந்தது. இதற்கு மிக முக்கியமாக வீரர்களின் காயம் இருந்தது. குறிப்பாக விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கே எல் ராகுலின் காயம் இருந்தது.

இந்த நிலையில் இன்று மதியம் 1:30 மணிக்கு தேர்வுக்குழு புதிய தலைவராக பதவியேற்று இருக்கும் அகர்கர் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை வெளியிட்டார்.

ஆசியக் கோப்பை தொடருக்கு 17 வீரர்கள் அணியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை தொடருக்கு 15 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று உலகக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா தொடர்கிறார். துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நீடிக்கிறார். மேலும் விக்கெட் கீப்பர்களாக இசான் கிஷான் மற்றும் கேஎல்.ராகுல் இருவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆசியக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்டிருந்த அணியில் இருந்து இளம் திலக் வர்மா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா இருவரும் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் பேக்கப் வீரராக ஆசியக்கோப்பை இந்திய அணியில் தொடர்ந்த சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு இருக்கிறார்.

இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெறுகின்ற காரணத்தினால் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்கின்ற காரணத்தினால், ஏற்கனவே தற்போதைய இந்திய அணியில் ஆப் ஸ்பின்னர்கள் யாரும் இல்லை என்பதால், தமிழக வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிவிக்கப்பட்டுள்ள அணியில் இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு 15 பேர் கொண்ட இந்திய அணி:

ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ், கேஎல்.ராகுல், இஷான் கிஷான், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சர்துல் தாக்கூர், ஜஸ்ட்பிரித் பும்ரா, முகமது சமி மற்றும் முகமது சிராஜ்.