உலக கோப்பை.. இந்திய அணிக்கு எதிராக ஆடும் 2 இந்திய வம்சாவளி நெதர்லாந்து வீரர்கள்!

0
596
Dutch

இன்று துவங்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் பத்தாவது அணியாக உள்ளே வந்த அணி நெதர்லாந்து அணி!

சில மாதங்களுக்கு முன்பு ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதி சுற்றில், யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு, இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு நெதர்லாந்து அணி தகுதி பெற்றது!

- Advertisement -

நடைபெற்ற அந்த தகுதிச்சுற்று தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நெதர்லாந்து அணி வெளிப்படுத்திய ஆட்டம் மிக பிரமிப்பான ஒன்றாக இருந்தது.

சமனில் முடிந்த அந்த ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் 30 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றதோடு வெஸ்ட் இண்டீஸ் அணியும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இருந்து முதன்முறையாக விளையாடாமல் வெளியேற்றி இருக்கிறது.

மேலும் கடந்த டி20 உலகக் கோப்பையில் அரை இறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பில் 99 சதவீதம் இருந்த தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி, பாகிஸ்தான் அணியை அரையிறுதிக்கு அனுப்பிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது இந்த நெதர்லாந்து அணிதான்.

- Advertisement -

டச்சு நாடான நெதர்லாந்தில் இந்திய வம்சாவளியினர் கணிசமானோர் இருக்கின்றார்கள். அவர்கள் நெதர்லாந்து கிரிக்கெட் அணிலும் இடம் பெற்று விளையாடி வருகிறார்கள். நடக்க இருக்கும் உலகக் கோப்பை தொடரில் இரண்டு இந்திய வம்சாவளி வீரர்கள் விளையாட இருக்கிறார்கள்.

விக்ரம்ஜித் சிங் :

20 வயதான இந்த இளம் வீரர் இடது கை துவக்க பேட்ஸ்மேனாக நெதர்லாந்து அணிக்கு இருந்து வருகிறார். கடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக இவர் விளையாடிய பொழுது வெளி உலகத்திற்கு நன்கு அறியப்பட்டார். நெதர்லாந்து அணிக்கு சதம் விளாசிய வீரராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரியன் தத் :

இந்த இந்திய வம்சாவளி வீரருக்கும் 20 வயதே ஆகிறது. இவர் வலது கை ஆப் ஸ்பின்னர் ஆக நெதர்லாந்து அணியில் இருந்து வருகிறார். நடக்க இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இவர் நெதர்லாந்து அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. மேற்கண்ட இரண்டு இந்திய வம்சாவளி வீரர்களுமே இந்த உலக கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்!