“உலக கோப்பை இறுதிப் போட்டி.. இந்த 2 அணிகள்தான் மோதும்” – ஷேன் வாட்சன் திட்டவட்டமான கணிப்பு!

0
56009
Watson

இந்த முறை இந்தியாவில் நடக்கும் 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான ஆரம்பக் கட்டத்தில், தொடர் வெற்றி பெறுமா? என்கின்ற பெரிய சந்தேகம் நிலவியது.

இந்தியாவில் மழைக்காலமாக இருந்தது, மேலும் டி20 கிரிக்கெட்டுக்கான வரவேற்பு பெரிய அளவில் இருந்ததால் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான வரவேற்பு குறைந்து இருந்தது இதெல்லாம் நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் வெற்றி குறித்து சந்தேகத்தை உருவாக்கியது.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது எல்லா உலகக் கோப்பைகளையும் விட நடப்பு உலகக் கோப்பை மிக வெற்றிகரமானதாக இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு இந்த உலகக்கோப்பைத் தொடர் கொஞ்சம் உயிர் கொடுத்திருக்கிறது என்றே கூற வேண்டும்.

தற்பொழுது அரையிறுதிக்கான நான்கு இடங்களில் இந்தியா தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா என மூன்று அணிகள் தகுதிப் பெற்று இருக்கின்றன. இதில் தென் ஆப்பிரிக்க அணி யாரும் எதிர்பார்க்காத விதத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து அசத்தியிருக்கிறது.

அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணி முதல் இரண்டு ஆட்டங்களில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளிடம் தோல்வி அடைந்து, இதற்கு அடுத்து தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வென்று மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்தியா விளையாடிய எட்டுப் போட்டிகளையும் வென்று முதல் இடத்தில் இருக்கிறது. தற்பொழுது நான்காவது இடத்திற்கான போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என மூன்று அணிகள் இருக்கின்றன.

- Advertisement -

இதுவரை அரையிறுதிக்கு தகுதி பெற்ற மூன்று அணிகள் அடிப்படையில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்த தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் சந்திக்கின்றன என்பது முடிவாக இருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் இடம் எந்த இரண்டு அணிகள் அரையிறுதியில் மோதும் என்கின்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு ஷேன் வாட்சன் எந்த விதமான பெரிய பதிலையும் கூறாமல் மிகச் சுருக்கமாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதன்மூலம் அவர் மீண்டும் உலகக்கோப்பையின் நாக் அவுட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி சோக் ஆகும் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார். அதே பழைய மோசமான வரலாறு தென் ஆப்பிரிக்காவுக்கு தொடருமா? என்று பார்க்க வேண்டும்!