உலக கோப்பை பைனல்.. ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்.. அச்சுறுத்தும் ஒரே வீரர்!

0
906
Australia

13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை குஜராத் அகமதாபாத் மைதானத்தில் ஆஸ்திரேலியா இந்தியா அணிகளுக்கு இடையே நடக்க இருக்கிறது.

இந்த முறை உலகக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலியா அணியில் மூன்று மிதவேக பந்துவீச்சு ஆள்ரவுண்டர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.

- Advertisement -

மிட்சல் மார்ஸ், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், கேமரூன் கிரீன் என ஒரே அணியில் மூன்று மிதவேக பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் இருக்கின்ற காரணத்தினால், ஆஸ்திரேலியா அணிக்கு அது பெரிய பலமாக பார்க்கப்பட்டது.

ஆனால் இந்திய சூழ்நிலையில் மிட்சல் மார்ஸ் தவிர மற்ற இருவரும் பெரிதான பேட்டிங் செயல்பாட்டை காட்டவில்லை. இதன் காரணமாக அவர்களை வைத்து பேட்டிங் நீளத்தை ஆஸ்திரேலியா அணியால் அதிகரித்துக் கொள்ள முடியவில்லை.

மேலும் டி20 எழுச்சியின் காலத்தில், தற்போது ஒருநாள் கிரிக்கெட்டின் மிடில் ஓவர்களை விளையாடும் பொறுமையும், திறமையும் இல்லாத பேட்ஸ்மேன்களாக பலர் இருந்து வருகிறார்கள். இதனால்தான் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது என்றே கூறலாம்.

- Advertisement -

எனவே இதன் காரணமாக மிடில் ஓவர்களில் இன்னிங்ஸை கட்டமைக்கும் லபுசேன் விளையாடும் வாய்ப்பை கடந்த போட்டியில் பெற்றார். ஸ்டாய்னிஸ் வெளியேற்றப்பட்டார்.

நாளை இறுதிப்போட்டி நடக்கும் குஜராத் அகமதாபாத் ஆடுகளமும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். எனவே நாளையும் ஆஸ்திரேலியா அணி மிதவேக பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் பக்கம் செல்லாது.

தற்போதைய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் மிகவும் ஆபத்தான வீரர். அவர் சூழ்நிலைகளை பொருட்படுத்தாமல் கடகடவென்று ரன்களை குவிக்க கூடியவர். இதனால் அடுத்து வரக்கூடியவர்களுக்கு நெருக்கடியே இருக்காது. அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இதைத்தான் செய்தார். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவிற்கு எதிராகவும் இதையே செய்தார். எனவே இவர் விக்கெட் முக்கியம்.

உலகக் கோப்பை இறுதிப்போட்டி ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன் :

டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்சல் மார்ஸ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், கிளன் மேக்ஸ்வெல், ஜோஸ் இங்லீஷ், பாட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஜோஸ் ஹேசில்வுட்.