உலக கோப்பை பைனல்.. அகமதாபாத் மைதான புள்ளி விபரம் என்ன சொல்கிறது? டாஸ் ஜெயித்தால் என்ன செய்ய வேண்டும்? முழு விபரம்!

0
11551
Rohit

13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வருகின்ற 19ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் தொடரை நடத்தும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது.

மாற்றிக் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய மைதானமான குஜராத் அகமதாபாத் மைதானம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் இருக்கைகள் கொண்டதாக இருக்கிறது. இந்தியா இறுதிப் போட்டியில் விளையாடுகிறது என்பதால் மைதானம் முழுவதும் நிரம்பும் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -

ஒட்டுமொத்தமாக இந்த குஜராத் அகமதாபாத் மைதானத்தில் 30 ஒரு நாள் போட்டிகள் நடந்திருக்கின்றன. இதில் சரிக்கு சமமாக முதலில் பேட்டிங் செய்த அணிகள் 15 முறையும் இரண்டாவது பேட்டிங் செய்த அணியில் 15 முறையும் வெற்றி பெற்று இருக்கின்றன.

அதே சமயத்தில் இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் நான்கு ஆட்டங்கள் நடைபெற்று இருக்கிறது. இந்த நான்கு ஆட்டங்களில் மூன்று ஆட்டங்களில் இரண்டாவது பேட்டிங் செய்த அணிகள் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒருமுறை மட்டுமே முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்று இருக்கிறது.

இங்கிலாந்து நியூசிலாந்து மோதிய உலகக் கோப்பையின் முதல் போட்டியில் இரண்டாவது பேட்டிங் செய்த நியூசிலாந்து, இதேபோல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணிகள் இரண்டாவது பேட்டிங் செய்து வென்றது.

- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் மட்டுமே முதலில் பேட்டிங் செய்து 280+ ரன்கள் எடுத்து, 240+ ரண்களில் இங்கிலாந்து அணியை மடக்கி ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருக்கிறது.

பொதுவாக குஜராத் அகமதாபாத் மைதானம் மெதுவான ஆடுகளத்தை கொண்ட சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் இரண்டாவது பகுதியில் பனிப்பொழிவு வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு. இங்கு பொதுவான முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 243 என்று இருக்கிறது.

ஆனால் இங்கு கடந்த நான்கு போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இரண்டு அணிகளும் முதலில் பேட்டிங் செய்த பொழுது 280 ரன்கள் எடுத்திருக்கின்றன. பாகிஸ்தான் 190 மற்றும் ஆப்கானிஸ்தான் 240 ரன்கள் எடுத்திருக்கின்றன்.

இங்கு பொதுவாக டாசில் வெற்றி பெற்றால் இரண்டாவது பேட்டிங் செய்வது தற்போதைக்கு நல்ல பலனை தரக்கூடியதாக இந்த உலகக் கோப்பை தொடரில் அமைந்திருக்கிறது. எனவே டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச வேண்டும். மேலும் இந்திய அணி பந்துவீச்சு வரிசையில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று நம்பப்படுகிறது!