உலக கோப்பை பங்களாதேஷ் அணி அறிவிப்பு.. 16 வருட வீரருக்கு இடமில்லை.. சர்ச்சைகள் முடிவுக்கு வந்தது!

0
16206
Bangladesh

நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு, மற்ற கிரிக்கெட் வடிவங்களில் உலகக் கோப்பை தொடர்களை விட, கூடுதல் எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருக்கும்.

அதே சமயத்தில் 2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 கிரிக்கெட்டின் வளர்ச்சி மிக அசுரத்தனமாக இருந்து வருகிறது.

- Advertisement -

இப்படி டி20 கிரிக்கெட்டின் வளர்ச்சி மிகப் பெரிய அளவில் இருக்கும் பொழுது, ரசிகர்கள் முழுவதுமாக அந்த கிரிக்கெட் வடிவத்திற்கு பழகிவிட்ட பொழுது, இந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கின்ற காரணத்தினால், கூடுதல் கவனமும் இருக்கிறது.

இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை க்கு தங்களுடைய இறுதி அணியை ஒவ்வொரு கிரிக்கெட் நாடும் செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும். இந்த வகையில் இன்று இலங்கை தங்களுடைய அணியை அறிவித்திருந்தது. தற்பொழுது பங்களாதேஷும் தங்களுடைய 15 பேர் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அணியை அறிவித்திருக்கிறது.

அறிவிக்கப்பட்ட இந்த அணியில் 2007 ஆம் ஆண்டு முதல் பங்களாதேஷ் அணிக்காக 16 வருடங்களாக விளையாடி வரும் துவக்க இடது கை ஆட்டக்காரர் தமிம் இக்பால் இடம்பெறவில்லை. தற்பொழுது இவருக்கு 34 வயதாகிறது.

- Advertisement -

இவர் விஷயத்தில் ஒரு சின்ன ஆச்சரியம் என்னவென்றால், அணி நிர்வாகம் இவரை ஒதுக்கவில்லை. மாறாக கேப்டனாக இருந்த இவரை, சமீபத்தில் உள்நாட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போது திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பங்களாதேஷ் அரசே சமாதானம் செய்யும் அளவுக்கு சென்று மீண்டும் திரும்பி வந்தார்.

இதற்கு நடுவில் சகிப் அல் ஹசன் ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தினார். இந்த நிலையில் தமிம் இக்பால் தொடர்ச்சியாக மாறி மாறி முடிவுகள் எடுப்பதில் சகிப் அல் ஹசன் கோபமாக இருப்பதாக கூறப்பட்டது. தற்பொழுது இவர் அணியில் இல்லாதிருப்பதால் எல்லா சர்ச்சைகளும் முடிவுக்கு வந்திருக்கிறது. உலகக் கோப்பையில் பங்களாதேஷ் அணியை சகிப் அல் ஹசன் கேப்டனாக இருந்து வழி நடத்துகிறார்.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு 15 பேர் கொண்ட பங்களாதேஷ் அணி:

ஷகிப் அல் ஹசன் (கே), தன்சித் தமீம், லிட்டன் தாஸ், நஜிமுல் ஹுசைன் சாண்டோ, முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, தவ்ஹித் ஹிரிடோய், மெஹதி ஹசன், நசும் அகமது, மஹதி ஹசன், தஸ்கின் அகமத், ஹசன் மஹ்மூத், முஸ்தாபிஸூர், ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் தன்சிம் சாகிப்.