உலக கோப்பை ஆஸி அணி அறிவிப்பு.. அதிர்ஷ்ட வீரருக்கு இடம்.. ஸ்பின்னர்கள் வெளியே.. அதிரடி முடிவு!

0
5798
Australia

இந்தியாவில் நடைபெற இருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு இறுதி அணியை அறிவிக்கும் நாளாக இன்று செப்டம்பர் 28ஆம் தேதி இருக்கிறது!

இந்த நிலையில் இதுவரையில் இந்திய அணி நிர்வாகம் தனது இறுதி அணியை அறிவிக்காமல் இருந்து வருகிறது. இந்தியத் தேர்வாளர்கள் உடன் இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமி தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்திய அணி நிர்வாகம் இறுதிவரை உலகக் கோப்பை இறுதி அணியை அறிவிக்காவிட்டால் ஏற்கனவே அறிவித்திருக்கும் அணியே இறுதியானதாக எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய அணி போலவே ஆஸ்திரேலியா அணியும் தமது 15 பேர் கொண்ட இறுதி உலகக்கோப்பை அணியை அருவிக்காமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பை ஆஸ்திரேலியா அணி எது என்பது குறித்து எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்திருக்கிறது.

- Advertisement -

அறிவிக்கப்பட்ட அணிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாக இருக்கிறார். எல்லோரும் எதிர்பார்த்தது போலவே அதிர்ஷ்ட வீரர் மார்னஸ் லபுசேன் தென்னாபிரிக்கா மற்றும் இந்தியாவில் சிறப்பாக விளையாடி தற்பொழுது உலகக்கோப்பை ஆஸ்திரேலியா அணிக்குள்ளும் நுழைந்து விட்டார்.

அதே சமயத்தில் இந்தியாவில் உலகக்கோப்பை நடக்கின்ற காரணத்தினால் கூடுதல் சுழற் பந்துவீச்சாளருக்கு இடம் கிடைக்கும் என்று ஆஸ்திரேலியா அணியில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆடம் ஜாம்பா மட்டுமே சுழற் பந்து வீச்சாளராக அணியில் நீடிக்கிறார். சங்கா மற்றும் ஆஸ்டன் அகர் இருவருக்கும் இடம் தரப்படவில்லை.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி:

பாட் கம்மின்ஸ் (சி)
சீன் அபோட்
அலெக்ஸ் கேரி
கேமரூன் கிரீன்
ஜோஷ் ஹேசில்வுட்
டிராவிஸ் ஹெட்
ஜோஷ் இங்கிலிஸ்
மார்னஸ் லபுசேன்
மிட்செல் மார்ஷ்
கிளென் மேக்ஸ்வெல்
ஸ்டீவ் ஸ்மித்
மிட்செல் ஸ்டார்க்
மார்கஸ் ஸ்டோனிஸ்
டேவிட் வார்னர்
ஆடம் ஜம்பா