உலக கோப்பை 2023.. பும்ரா ஸ்பெஷல் சாதனை.. பொட்டி கிரவுண்டில் பட்டைய கிளப்பிய இந்தியா.. ஆப்கானிஸ்தான் நிதானம்!

0
493
Bumrah

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இன்று டெல்லி மைதானத்தில் இந்தியா ஆப்கான் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷாகிதி பேட்டிங் செய்வதாக அறிவித்தார். ஆப்கானிஸ்தான் அணி அப்படியே தொடர, இந்திய அணியில் ஒரு மாற்றமாக அஸ்வின் இடத்தில் சர்துல் தாக்கூர் வந்தார்.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் துவக்க ஆட்டக்காரர்கள் இப்ராஹிம் ஜட்ரன் 22 மற்றும் குர்பாஸ் 21 ரன்களில் ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து வந்த ரஹ்மத் ஷா 16 ரன்களில் வெளியேறினார்.

ஆப்கானிஸ்தான அணி நெருக்கடியில் இருக்க , கேப்டன் ஹஸமத்துல்லா ஷாகிதி மற்றும் அசமத்துல்லா ஓமர்சாய் இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியை நெருக்கடியில் இருந்து மீட்க ஆரம்பித்தார்கள்.

சிறப்பாக விளையாடிய ஓமர்சாய் அரைசதம் அடித்து 62 ரன்களில். வெளியேறினார். அடுத்து முகமது நபி 19, கேப்டன் ஷாகிதி 80, நஜிபுல்லா ஜட்ரன் 2, ரஷித் கான் 16, முஜீப் உர் ரஹ்மான் 10, நவீன் உல் ஹக் 9 ரன்கள் எடுத்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

டெல்லி மைதானம் சிறியது, அத்தோடு ஆடுகளமும் பேட்டிங் செய்ய மிகவும் சாதகமானது. இங்கு முதல் போட்டியில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 428 ரன்கள் குவிக்க, திருப்பி விளையாடிய இலங்கை அணி 330 ரன்களுக்கு மேல் குவித்தது.இப்படியான ஆடுகளத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை 272 ரன்கள் கட்டுப்படுத்தியது மிகச் சிறப்பான பந்துவீச்சு செயல்பாடு ஆகும்.

இந்திய அணியின் தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 10 ஓவர்களுக்கு 39 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார். இது அவருடைய உலகக் கோப்பை சிறந்த பந்துவீச்சாக அமைந்திருக்கிறது. இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக 55 ரன்கள் தந்து, நான்கு விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்துவீச்சாக இருந்தது.

மேலும் இந்திய அணியின் தரப்பில் ஹர்திக் பாண்டியா 2, சர்துல் தாக்கூர் 1, மற்றும் குல்தீப் யாதவ் 1 விக்கெட் கைப்பற்றினார்கள். இதற்கு அடுத்து இலக்கை நோக்கி இந்திய அணி விளையாட இருக்கிறது!