ODI உலகக் கோப்பை 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்த இந்திய பேட் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர்!

0
2007
ICT

13ஆவது உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரையில் நடக்க இருக்கிறது. இந்த முறை முதல்முறையாக இந்தியாவில் முழுமையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட இருக்கிறது!

இதற்கு முன்பாக இந்திய அணி ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்கிறது. இதற்கு இந்திய தேர்வுக்குழு 17 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்து இருக்கிறது. இந்த அணி மீதான விமர்சனங்கள் பலவாறாக வைக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

மேலும் அறிவிக்கப்பட்டுள்ள 17 பேர் கொண்ட அணியில் இருந்து மட்டுமே அணி தேர்வு செய்யப்படக்கூடாது என்று பல முன்னாள் வீரர்கள் கூறி வருகிறார்கள். காரணம் சாகல், ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் யாரையாவது அணியில் சேர்க்க வேண்டும் என்கின்ற கோரிக்கை இருக்கிறது.

இப்படியான நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரும், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பாங்கர் யாரும் கூறாத ஒரு புதிய இந்திய வீரரை அணிக்குள் கொண்டு வந்து, 15 பேர் கொண்ட உலகக்கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்து இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் பொழுது
“என்னுடைய ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்களாக ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் இருப்பார்கள். அதேசமயம் விக்கெட் கீப்பர்களாக இசான் கிஷான் மற்றும் கே.எல்.ராகுல் இருவர் வருவார்கள்.

- Advertisement -

சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாக அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா. வேகபந்துவீச்சு ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா எனது அணியில் இருப்பார்கள். அதேசமயம் சிறப்பு சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் இருப்பார்.

என்னுடைய அணியில் நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள். அவர்கள் ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ் மற்றும் அர்ஸ்தீப் சிங்!” என்று தெரிவித்திருக்கிறார்!

சஞ்சய் பாங்கரின் ஒருநாள் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ;

ரோகித் சர்மா, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், விராட் கோலி, கே எல் ராகுல், இஷான் கிஷான், அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ் மற்றும் அர்ஸ்தீப்.