உலகத்தரம் வாய்ந்த ஸ்பின் பந்துவீச்சாளரான அவர் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வேண்டும் – மூத்த இந்திய வீரர் குறித்து கிரீம் ஸ்வான் கருத்து

0
167

இங்கிலாந்து அணிகள் விளையாடிய தலைசிறந்த ஸ்பின் பந்துவீச்சார்கள் மத்தியில் கிரீம் ஸ்வான் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் ஆவார். அவர் தற்பொழுது இந்திய அணியைச் சேர்ந்த ஒரு ஸ்பின் பந்து வீச்சாளர் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

உண்மையில் அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர்

- Advertisement -

இந்திய அணியில் தற்பொழுது ஸ்பின் பந்துவீச்சாளர்கள் மத்தியில் யுஸ்வேந்திர சஹால் மிகச் சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் என இரண்டிலும் கலக்கி கொண்டிருக்கும் அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடாதது இன்னும் ஆச்சரியமாக தான் இருக்கிறது.இதுபற்றி நான் அவரிடம் கூட ஒருமுறை கேட்டிருக்கிறேன்.

ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் மிகச் சிறப்பாக பந்து வீசும் அவரால் ஏன் டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீச முடியாது. ஸ்பின் பந்து வீச்சில் நிதானம் மற்றும் கவனம் தேவை அது அவரிடம் நிறைய இருக்கிறது. லெக் ஸ்பின் பந்து வீச்சில் கைதேர்ந்த பந்து வீச்சாளர் அவர். குறிப்பாக பந்து ஈரமாகும் சமயத்தில் கூட அவருடைய பந்துவீச்சு அற்புதமாக இருக்கும். மொத்தத்தில் அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த ஸ்பின் பந்து வீச்சாளர், அவர் இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று கிரீம் ஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் பற்றி பேசிய அவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து மிகச் சிறப்பாக விளையாடியது. பிரண்டன் மெக்கல்லம் தலைமை பயிற்சியாளராக தனது பணியை மிகச் சிறப்பாக செய்து வருகிறார். நிச்சயம் இந்திய அணிக்கு எதிராகவும் இனி உலகில் உள்ள மற்ற அணிகளுக்கு எதிராகவும் இங்கிலாந்து அணி மிகச் சிறப்பாக டெஸ்ட் போட்டிகளில் செயல்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -