உலக லெஜென்ஸ் சாம்பியன்ஷிப் 2024 கிரிக்கெட் லீக் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
சாம்பியன் பட்டம் வென்று உள்ள இந்திய அணிக்கு ஏராளமான விருதுகளும் அசத்தலான பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற உலகின் மூத்த வீரர்கள் கலந்து கொண்ட மொத்தமாக ஆறு அணிகள் பங்கு பெற்ற உலக சாம்பியன்ஷிப் லெஜென்ஸ் கிரிக்கெட் லீக் தொடரில் இறுதிப் போட்டிக்கு இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் தகுதி பெற்று இன்று இறுதிப்போட்டியில் விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் குவித்தது.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கி விளையாடிய இந்திய சாம்பியன்ஸ் அணியில் அம்பாதி ராயுடுவின் அதிரடியான பங்களிப்பால் இந்தியா சாம்பியன்ஸ் அணி 19 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்து ஐந்து விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்த நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஒரு கோடியே 66 லட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இரண்டாம் இடம் பிடித்த பாகிஸ்தான் அணிக்கு 83 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த சீசனில் ப்ளேயர் ஆப் த டோர்னமெண்ட் விருதை இந்தியாவின் யூசுப் பதான் பெற்றிருக்கிறார். தொடர் நாயகன் விருது வென்ற யூசுப் பதானுக்கு நான்கு லட்ச ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இறுதி போட்டியில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்திய அம்பாத்தி ராயுடுக்கு ஆட்டநாயகன் விருதோடு இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிப் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேனுக்கான விருதை யூசுப் தான் பெற்றதோடு அவருக்கு 42 ஆயிரம் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியில் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றிய அனுரீத் சிங்கிற்கு ஸ்வீட் மொமெண்ட் ஆப் த ஃபைனல் விருதோடு 42 ஆயிரம் பரிசுத்தொகையும் பெறுகிறார். அதுமட்டுமல்லாமல் இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்ததற்கான விருதை பாகிஸ்தான் அணியின் சோயப் மாலிக் பெற்றிருக்கிறார்.
இதையும் படிங்க:ஜிம்பாப்வே அந்த நாடு மாதிரியே இருந்தது.. அத வச்சுதான் இந்த பிளான் போட்டேன் – தொடர் நாயகன் வாஷிங்டன் சுந்தர் பேட்டி
அவர் இந்த தொடரில் மொத்தமாக 245 ரன்கள் குவித்திருக்கிறார். மேலும் அதிக விக்கெட் வீழ்த்தியதற்கான விருதை ஆஸ்திரேலியாவை சேர்ந்த கோல்டர் நைல் பெறுகிறார். அவர் இந்த தொடரில் மொத்தமாக ஒன்பது விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா என ஆறு அணிகள் பங்கேற்ற போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டியில் சாம்பியன் கோப்பையையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.