நேற்று நடைபெற்ற போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்திய அணி எங்கே தவறியது மற்றும் போட்டியில் என்ன நடந்தது என்பது குறித்து அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விரிவாகப் பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் எதிரணி நிர்ணயித்த இலக்கை துரத்தும் போது இந்திய அணியின் அப்ரோச் சிறப்பாக இருந்தபோதிலும், பந்துவீச்சில் திட்டமிட்டபடி செயல்பட முடியாமல் போனதே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.
போட்டியின் சேசிங் குறித்து பார்க்கும்போது 250 ரன்களை சேஸ் செய்யும் போது ஒரு குறிப்பிட்ட பேட்டர்னை பின்பற்றி தான் விளையாட வேண்டும். ஆனால், இந்த ஆட்டத்தில் நமது பந்துவீச்சு திட்டங்களை சரியாக எக்ஸிக்யூட் செய்ய முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது, அங்குதான் நாம் சற்று பின்தங்கி விட்டோம்.
இந்த தோல்வி குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசும்போது “தோல்விக்கான காரணம் எல்லாமே பந்துவீச்சில் இருந்துதான் தொடங்கியது. நமது பந்துவீச்சாளர்கள் லைன் மற்றும் லென்த்தை சரியாக வீசவில்லை என்று நினைக்கிறேன். இறுதியில் 250 ரன்களை சேஸ் செய்யும் போது குறிப்பிட்ட ஒரு பேட்டர்னை பின்பற்றி தான் செல்ல வேண்டும். எனவே சேசிங் செய்யும்போது நமது அணியின் அப்ரோச் எனக்கு பிடித்திருந்தது. ஆனால் பந்துவீச்சில் திட்டங்களை செயல்படுத்த முடியாததால் சற்று பின்தங்கி விட்டோம்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் அபிஷேக் சர்மா ஆரம்பத்தில் ஸ்டிரைக்கில் இல்லாதது பற்றி பேசும்போது “உண்மையில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை, அந்த சமயத்திலும் நாம் ஓவருக்கு 12 ரன்கள் என்ற விகிதத்தில் தான் சென்று கொண்டிருந்தோம். எதிரணி வீரர்களின் எக்ஸிகியூஷன் சிறப்பாக இருந்ததுடன் விக்கெட்டில் இருந்தும் பந்து சற்று விலகிச் சென்றது. விக்கெட்டில் பந்து சற்று கிக் ஆனதுடன், அவர்கள் பீல்டிங்கை மிகவும் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர். எனவே அவர்களின் திறமைக்கு பாராட்டுக்கள் தெரிவிக்க வேண்டும், அவர்களின் எக்ஸிகியூஷன் மிகவும் ஸ்பாட் ஆன் ஆக இருந்தது” என்று கூறி முடித்து இருக்கிறார்.