ஜிம்பாப்வே அந்த நாடு மாதிரியே இருந்தது.. அத வச்சுதான் இந்த பிளான் போட்டேன் – தொடர் நாயகன் வாஷிங்டன் சுந்தர் பேட்டி

0
79

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி20 போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்த தொடர் கூறித்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இளம் வீரர்களை நம்பி ஜிம்பாப்வே தொடருக்கு சுற்றுப்பயணம் அனுப்பிய இந்திய கிரிக்கெட் வாரியம் அவர்களது நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டியில் தோல்வியடைந்து இருந்தாலும் நான்கு போட்டியிலும் வெற்றி பெற்று டி20 தொடரை கைப்பற்றி இருக்கிறது. இன்று நடைபெற்ற கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது.

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் 18.3 ஓவர்களுக்கு 125 ரன்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட் ஆனது. இதனால் 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது. பேட்டிங்கில் 12 பந்துகளில் 26 ரன்கள் குவித்தது மட்டுமல்லாமல் பந்து வீச்சிலும் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றிய சிவம் துபே ஆட்டநாயகன் விருது பெற்றார்.

மேலும் இந்த தொடரில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட வாஷிங்டன் சுந்தர், தொடர் நாயகன் விருதை பெற்று இருக்கிறார். இந்தத் தொடர் குறித்து வாஷிங்டன் சுந்தர் கூறும் பொழுது “இது ஒரு அற்புதமான நாளாக அமைந்திருக்கிறது. இந்தத் தொடரை நாங்கள் வெற்றியுடன் முடித்திருப்பது மகிழ்ச்சி. முதல் போட்டிக்கு பிறகு இங்கு உள்ள ஆட்ட சூழ்நிலை தென் ஆப்பிரிக்காவின் சூழ்நிலையோடு அதிக அளவு ஒத்துப்போனது.

- Advertisement -

தென்னாபிரிக்க ஆடுகளங்களில் எவ்வளவு வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்குமோ அதே சூழ்நிலையை இங்கு உணர்ந்தேன். நிறைய தகவல்களை அறிவதற்கு போதிய நேரம் எங்களுக்கு இருந்தது. நிறைய கற்றல் அனுபவங்களை இந்த தொடரின் மூலம் உணர்ந்திருக்கிறேன். மேலும் அதிகமாக இந்த தொடரில் பந்து வீசி இருக்கிறேன். இதே கற்றல் அனுபவத்தை அடுத்து வரும் இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:சாம்சன்கிட்ட அந்த ராஜஸ்தான் வேலையை செய்யலாம்னு சொன்னேன்.. கில் அப்பவே இப்படிதான் – ரியான் பராக் பேட்டி

இந்திய அணி அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிரான தொடரில் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடருக்கு டி20 உலக கோப்பைக்காக ஜிம்பாப்வே தொடருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட முன்னணி வீரர்கள் திரும்பும் நிலையில் இலங்கை அணிக்கு எதிரான தொடர் நிச்சயம் சுவாரசியமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.