“வேலை ஓவர் விளையாட முடியாது!” – விலகுகிறார் சிஎஸ்கே இங்கிலாந்து வீரர்!

0
48675
CSK

கிரிக்கெட் உலகத்தின் தற்காலத்தில் வீரர்களின் பணி சுமை என்பது ஒவ்வொரு கிரிக்கெட் அணி நிர்வாகங்களும் இந்த விஷயத்தில் மிகப்பெரிய கவனத்தை செலுத்தி வருகின்றன!

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டர் நட்சத்திர பேட்ஸ்மேன் கிளேன் மேக்ஸ்வெல் பணிச்சுமையால் உண்டான மனச்சுமையால் காலவரையற்ற ஓய்வு கேட்டு வாங்கி போயிருந்தார்!

- Advertisement -

இதற்கு அடுத்து இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மற்றும் தற்போதைய டெஸ்ட் அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் இதேபோல் காலவரையற்ற ஓய்வு கேட்டு அணியிலிருந்து வெளியே போய் மீண்டும் திரும்பி வந்து விளையாடினார்.

இதற்குப் பிறகு பெரிய கிரிக்கெட் நிர்வாகங்கள் எல்லாமே இந்த விஷயத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த ஆரம்பித்துள்ளன. வீரர்கள் தொடர்ச்சியாக விளையாடுவதால் அவர்களின் தனிப்பட்ட வெற்றியும் குறைகிறது அத்தோடு அணியின் வெற்றியும் பாதிக்கப்படுகிறது என்பதை புரிந்து உள்ளார்கள்!

இந்த வகையில் தற்போது இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் உருவாகி வரும் இளம் வீரர் ஹாரி புரூக் பணிச்சுமை காரணமாக தென்னாபிரிக்க டி20 தொடரில் சிஎஸ்கே நிர்வாகம் வாங்கியுள்ள அணியில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அவர் இந்திய அணி இந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்து சென்றதிலிருந்து அவர்களது தேசிய அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். மேலும் ஜனவரி மாதம் இங்கிலாந்து அணி விளையாட உள்ள ஒரு நாள் போட்டி தொடரிலும் விளையாட உள்ளார். இதற்குப் பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு இந்தியா வந்து ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கிறார். இப்படி தொடர்ந்து ஓய்வில்லாமல் அவர் விளையாடிக் கொண்டே இருப்பதால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரை ஓய்வெடுக்க சொல்லி அறிவுறுத்தி இருக்கிறது. அதை ஏற்று அவர் சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் தென் ஆப்பிரிக்கா டி20 அணியான ஜே எஸ் கே அணியில் இருந்து விலகி இருக்கிறார்!