இன்று மகளிர் டி20 உலக கோப்பை 2024.. எந்த சேனலில் பார்க்கலாம்.?. போட்டி நேரம்.. முழு விபரம்

0
446

பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெற உள்ளது. மொத்தமாக 10 நாடுகள் இந்த தொடரில் கலந்து கொள்ள இருக்கிறது. கடந்த முறை சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்த முறையும் வலுவான அணியாக இந்தத் தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்த சூழ்நிலையில் போட்டி அட்டவணை, தொலைக்காட்சி உரிமம் மற்றும் போட்டி நடைபெறுகிற நேரம் உள்ளிட்ட தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

- Advertisement -

ஒன்பதாவது டி20 மகளிர் உலகக் கோப்பை துபாயில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்டில் இன்று முதல் நடைபெற உள்ளது. மொத்தமாக பத்து நாடுகள் கலந்து கொள்ள உள்ள இந்த தொடரில் வங்கதேசம் போட்டியை நடத்தும் நாடாக இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பையில் மொத்தமாக மூன்று முறை சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியுள்ள ஆஸ்திரேலிய அணி நான்காவது முறையாக அலெக்சா ஹீலி தலைமையில் இந்த உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ளது.

மேலும் கடந்த முறை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த தென்னாப்பிரிக்க அணி மற்றும் ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான வலுவான இந்திய அணி மற்றும் இங்கிலாந்து அணி ஆகியவை இந்த உலகக் கோப்பையில் குறிப்பிடத்தக்க அணிகளாக விளங்குகின்றன. மேலும் இந்த முறை ஆசிய கோப்பையை கைப்பற்றிய இலங்கை அணியும் இதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பது எந்தவித சந்தேகமும் இல்லை.

- Advertisement -

டி20 உலகக் கோப்பை மகளிர் தொடரில் இன்று நடைபெற உள்ள முதல் போட்டியாக பங்களாதேஷ் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இன்று மாலை 3:30 மணிக்கு முதல் போட்டியில் மோத உள்ளன. மேலும் இன்றைய நாளில் இரவு 7.30 மணிக்கு பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இரண்டாவது போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக இந்திய கிரிக்கெட் அணி நாளை இரவு 07.30 மணிக்கு நியூசிலாந்து அணியுடன் தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது.

இந்த தொடர் முழுவதும் இந்திய நேரப்படி மாலை 3:30 மற்றும் இரவு 07.30 மணி என இரண்டு நேரங்களில் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் அனைத்துமே இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும் இணையதளத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் இணையதளத்தில் கண்டுகளிக்கலாம். மேலும் இந்த முறை ஆண்கள் கிரிக்கெட் அணியை போன்றே பெண்கள் கிரிக்கெட் அணிக்கும் ஒரே மாதிரியான பரிசுத்தொகை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:விராட் டீம் தந்த அந்த வலியை மறக்கவே முடியாது.. 2025 தொடர்தான் அவருக்கு கடைசி – ஸ்டூவர்ட் பிராட் பேட்டி

இதில் வெற்றி பெறும் அணிக்கு 2.34மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகையாக வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக இதில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும் குரூப் பி பிரிவில் பங்களாதேஷ், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் அணிகளும் இருக்கின்றன.

- Advertisement -