இவர் வீட்டுக்கு போக வேண்டியது தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை – வாஸிம் ஜாபர் அதிரடி!

0
970
wasim jaffer indian team

பங்களாதேசிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை  இந்திய அணி போராடி வெற்றி பெற்றது. 45 ரன்கள் 4 விக்கெட்டுகள் என்ற இக்கட்டான சூழ்நிலையில் நான்காம் நாள்  ஆட்டத்தை நோக்கிய இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்தது. அதற்குப்பின் அஸ்வின் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் எட்டாவது விக்கெட்க்கு 71 ரன்கள் சேர்த்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர் .

இன்றைய ஆட்டத்தின்  தொடக்கத்தில் இந்திய அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்த போது பங்களாதேஷ் அணிதான் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஸ்வின் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான ஆட்டத்தால்  இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

இந்தத் தொடரின் முதல் போட்டியில் இருந்து இந்திய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் தான்  பங்களாதேஷ் ஸ்பின்னர்கள்  ஆதிக்கம் செலுத்துவதற்கு அடித்தளம் அமைப்பதாக இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வாசிம் ஜாஃபர் குற்றஞ்சாற்றியுள்ளார்.

இது குறித்து பேசியுள்ள வாசிம் ஜாஃபர் ” கேப்டன் கே எல் ராகுல்  மற்றும் சுப்மன் கில் ஆகியோரின்  சுழர் பந்து வீச்சிக்கு எதிரான திட்டமிடல் தான் இந்திய அணியை   நெருக்கடிக்கு உள்ளாக்கியது அவர்கள் இருவரும் இன்னும் நல்ல தடுப்பாட்டத்துடன் தாக்குதல் பாணி ஆட்டத்தையும் கடைபிடித்து இருக்க வேண்டும்  என்று கூறினார் .

மேலும் கே.எல். ராகுலின்  மோசமான ஆட்டம் குறித்து பேசிய வாசிம் ஜாஃபர் ” இந்திய அணியின் துணை கேப்டன் கே எல் ராகுல் கடந்த சில டெஸ்ட் போட்டிகளிலேயே இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளிக்கவில்லை . மேலும் அவரது ஆட்டம் இந்தத் தொடரிலும் மிகவும் மோசமான ஒன்றாக அமைந்தது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பி விடுவார். அப்போது எந்த சந்தேகமும் இன்றி கே எல் ராகுல் அணிக்கு வெளியில் இருப்பார். டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை துவக்க ஆட்டக்காரர்கள்  பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்று” என்று குறிப்பிட்டார் .

- Advertisement -

தொடர்ந்து பேசியவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது. ரோகித் சர்மா மற்றும்  முகமது சமீ ஆகியோர் அணிக்கு திரும்புவார்கள். ஆச்சரியமான ஒரு விஷயமாக சூரியகுமார் யாதவ் ஒருவேளை இடம் பெறலாம்” என்று கூறினார்.