எங்களோடு என்றால் அவர் விடமாட்டார் – இந்திய வீரர் பற்றி யூனிஸ் கான்!

0
94
Younis khan

நாளை அனைத்து அரபு எமிரேட்டில் துவங்க இருக்கும் 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பல காரணங்களால் மிக முக்கியமானதாக உலக கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மாறுகிறது.

மிக முக்கியமாக இந்த கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை மோதிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அடுத்து கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் தற்போது பாகிஸ்தான் அணி ஓடும்போது உள்ள துபாய் மைதானத்தில் தான் இந்திய அணி மிகப்பெரிய தோல்வி ஒன்றை உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக சந்தித்தது.

- Advertisement -

இதையெல்லாம் தாண்டி இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி மீண்டும் தனது பழைய சிறப்பான பேட்டிங் ஃபார்முக்கு வருவாரா என்று அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. விராட் கோலியோடு தற்காலத்தில் ஒப்பிடப்படும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் தொடரில் விராட் கோலி விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் முக்கியமாக தற்போது நடக்கும் ஆசிய கோப்பை தொடர் அடுத்து ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆசிய அணிகளுக்கான ஒரு ஒத்திகை ஆக இருக்கும். தொடரில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு அணிகளும் டி20 உலகக் கோப்பைக்கு எப்படி தயாராவது என்று இந்தத் தொடரில் இருந்து அனுபவங்களை எடுப்பார்கள். உலக கிரிக்கெட் நாடுகள் ஆசிய கிரிக்கெட் நாடுகளை டி20 உலகக் கோப்பையை முன்னிட்டு எடை போடுவதற்கும் இந்தத் தொடர் உதவும். இந்தக் காரணங்கள் எல்லாம் சேர்த்து நாளை நடைபெற உள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை மிகமுக்கியமான தொடராக உலக கிரிக்கெட்டில் மாற்றுகிறது!

விராட் கோலி கடந்தகாலங்களில் பாகிஸ்தான் அணியோடு மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 50 ஓவர் கிரிக்கெட் வடிவத்தில் ஆட்டமிழக்காமல் 183 ரன்களை குவித்து அசத்தியிருக்கிறார். அவரது இந்த தனிப்பட்ட செயல்பாடு அவரை தற்போது மீண்டும் பாகிஸ்தான் அணியோடு சிறப்பான முறையில் விளையாட கூட்டி வரும் என்று முன்னாள் வீரர்கள் கருதுகிறார்கள்.

- Advertisement -

இந்த வகையில் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் லெஜெண்ட் வீரரான யூனுஸ் கான் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் ” பாபர் ஆசம் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருவது நம் எல்லோருக்கும் தெரிந்தது தான் அவர் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதே சமயத்தில் விராட் கோலி சிறப்பாக செயல்படவில்லை என்று கூற முடியாது. சமீபத்தில் அவர் சிறப்பாய் செயல்பட்ட நிகழ்வு ஏதும் அமையவில்லை அவ்வளவுதான்” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” பார்ம் என்பது ஓரிரு போட்டிகள் மட்டுமே. இந்த ஆசிய கோப்பையில் விராட்கோலி மீண்டும் சிறந்த நிலைக்கு வருவார் என்று நான் நம்புகிறேன். கடந்த காலங்களில் அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மிக சிறப்பாக செயல்பட்டது தற்போது அவர் பாகிஸ்தானுக்கு எதிராகவே மீண்டு வர உதவும் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறியிருக்கிறார்!