பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து வீரர்களுக்கு இடமில்லை, இந்திய அணியில் இருந்து இரண்டு வீரர்கள் – டிம் டேவிட் தேர்வு செய்துள்ள ஆல் டைம் சிறந்த டி20 அணி

0
4436

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிக தொகைக்கு விலை போனவர் சிங்கப்பூரைச் சேர்ந்த டிம் டேவிட். ஆரம்பத்தில் கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத காரணத்தினால் ஒரு சில போட்டிகளில் வெளியே அமர்த்தப்பட்டார். பின்னர் மீண்டும் தற்பொழுது வாய்ப்பு கிடைக்க ஒவ்வொரு போட்டியிலும் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி தோல்வி பெற்றிருந்தாலும் இவ்வாறு கடைசி நேரத்தில் களமிறங்கி 18 பந்துகளில் 46 ரன்கள் குவித்து கிட்டத்தட்ட ஹைதராபாத் அணிக்கு தோல்வி பயத்தை கண்முன் காண்பித்தது குறிப்பிடத்தக்கது.

ஓபனிங் வீரர்கள்

ஓபனிங் வீரர்களாக கிறிஸ் கெயில் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோரை டேவிட் தேர்வு செய்துள்ளார். திருபதி போட்டிகளை பொறுத்த வரையில் பல்வேறு ரன்கள் குவித்த வீரராக பல்வேறு சதங்கள் குவித்த வீரராகவும் கிறிஸ் கெயில் இருக்கிறார். ஓபனிங் வீரராக அவர் விளையாடுவது அணிக்கு பலம் சேர்க்கும் என்று டேவிட் தெரிவித்துள்ளார்.

மிடில் ஆர்டர் வீரர்கள்

விராட் கோலி, ஏபி டிவிலியர்ஸ்,கீரோன் பொல்லார்ட்,எம்எஸ் தோனி ஆகியோரை டேவிட் தேர்வு செய்துள்ளார். இவர்களில் விராட் கோலி எப்பொழுது வேண்டுமானாலும் கியரை மாற்றி வேகமாக ரன் குவிக்க கூடிய ஆற்றல் நிறைந்தவர். அவர் வெளிநாடுகளில் விளையாடுவது சரியான முடிவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக எம்எஸ் தோனி செயல்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

பந்து வீச்சாளர்கள்

அன்ட்ரூ ரசல், டுவைன் பிராவோ, ரஷீத் கான், மிட்ச்செல் ஸ்டார்க் மற்றும் சுனில் நரைன். இவர்கள் அனைவரையும் பந்துவீச்சாளர்களாக டேவிட் தேர்வு செய்துள்ளார். இவர்களில் அனைவரும் பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடக் கூடிய ஆற்றல் பெற்றவர்கள். எனவே இவர்கள் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அணிக்கு வலு சேர்ப்பார்கள்.

டேவிட் தேர்வு செய்துள்ள இந்த அணியில் எந்த ஒரு பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணி வீரர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் அதிகபட்சமாக மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்து ஐந்து வீரர்களையும் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணியில் இருந்து இரண்டு வீரர்களையும் தேர்வு செய்துள்ளார்.

டிம் டேவிட் தேர்வு செய்துள்ள ஆல் டைம் சிறந்த டி20 அணி

கிறிஸ் கெய்ல், ஷேன் வாட்சன், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், கீரோன் பொல்லார்ட், எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர் ), அன்ட்ரூ ரசல், டுவைன் பிராவோ, ரஷித் கான், சுனில் நரைன், மிட்செல் ஸ்டார்க்.