தோனியோட பியூட்டியே இதான்.. அந்த மைண்ட் வச்சிக்கிட்டு, பவுலர்களை மாத்தி மாத்தி ட்விஸ்ட் கொடுத்துட்டாரு – ஹர்திக் பாண்டியா பேட்டி!

0
23415

தோனியின் சிறப்பு இதுதான். அவருடைய மூளை மற்றும் பவுலர்களை பயன்படுத்தி எதையும் மாற்றி விடுவார் என்று போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்துள்ளார் ஹர்திக் பாண்டியா.

முதல் குவாலிபயர் போட்டியில் சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு ருத்துராஜ் 60 ரன்கள், டெவான் கான்வே 40 ரன்கள் அடித்துக்கொடுக்க, கடைசியில் ஜடேஜா 22 ரன்கள் அடித்து தனது கேமியோ விளையாடி சிஎஸ்கே அணியின் ஸ்கோரை 172 ரன்களுக்கு எடுத்துச் சென்றனர்.

- Advertisement -

இதனை சேஸ் செய்த குஜராத் அணிக்கு சுப்மன் கில் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் பெரிதளவில் சோதிக்கவில்லை. கடைசியில் வந்த ரஷீத் கான் 16 பந்துகளில் 30 ரன்கள் விளாசி கேமியோ விளையாடினார். இது குஜராத் அணிக்கு போதவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சிஎஸ்கே அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

போட்டி முடிந்தபின் பேட்டியளித்த குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், “அடிப்படைத் தவறுகளை செய்துவிட்டோம். அதுதான் எங்களை தோல்வியடைய செய்தது. எங்களிடம் இருக்கும் பந்துவீச்சுக்கு 15 ரன்கள் கூடுதலாக கொடுத்துவிட்டோம். தொடர் முழுவதும் ஒட்டுமொத்த அணியாக நன்றாகவே செயல்பட்டோம். எங்களது திட்டங்களை செயல்படுத்தினோம்.

இன்றைய கடைசியில் சில ரன்களை விட்டுக் கொடுத்தது தவறாகிவிட்டது. ஆகையால் இதிலிருந்து தவறுகள் என்னவென்று பெரிதாக கவனிக்க தேவையில்லை. ஓரிரு ஓவர்கள் மட்டுமே தவறாகிவிட்டது. இதனை பெரிதாக யோசிக்கவேண்டிய அவசியமில்லை. அடுத்த போட்டியை நோக்கி கவனம் செலுத்துவோம்.

- Advertisement -

தோனி கேப்டனாக இருக்கும்பொழுது இதுதான் சிறப்பு. அவரது மூளையை வைத்துக்கொண்டு பந்துவீச்சாளர்களை எங்கே எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெளிவாக திட்டமிட்டு செயல்படுத்துவார். இது சென்னை அணிக்கு கூடுதலாக 10 ரன்கள் கிடைத்தது போல. அவரது திட்டத்தை போல நாங்களும் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து விட்டோம். கண்டிப்பாக தோனிக்கு இந்த பெருமிதம் சென்றடைய வேண்டும்.

சிஎஸ்கே அணியை மீண்டும் வருகிற ஞாயிற்றுக்கிழமை சந்திக்க ஆவலாக இருக்கிறேன். இந்த தோல்வியை நினைத்து நான் வருத்தப்படவில்லை. எனது வாழ்க்கையில் வருத்தம் என்பதே கிடையாது. கடைசியில் ஈரப்பதம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். அது வரவில்லை. இன்றைய போட்டியில் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் எங்களுடையை தரத்திற்கு சரியாக செயல்படவில்லை என்று கூறவேண்டும்.

அடுத்து வரவிருக்கும் எலிமினேட்டர் போட்டியை கண்டிப்பாக கவனிப்பேன். என்னுடைய அண்ணன் விளையாடுகிறார் ஞாயிற்றுக்கிழமை ஃபைனலில் விளையாடுவதற்கு நம்பிக்கையுடன் இருக்கிறேன். எனவும் பேட்டியளித்து முடித்தார்.