“வில்லியம்சன் கேட்சை விட்டேன்.. எல்லாமே மோசமா போயிருக்கும்..!”- ஆட்டநாயகன் சமி அசத்தல் பேச்சு!

0
3001
Shami

இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி புதிய சரித்திரம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் அரை இறுதி போட்டியில், இந்திய அணி 7 வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணிக்கு விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சதங்கள் அடிக்க, இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தது.

இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணிக்கு வில்லியம்சன் மற்றும் மிட்சல் இருவரும் அதிரடியான அடித்தளத்தை உருவாக்கி, இந்திய அணியின் உலகக் கோப்பை கனவுக்கு பெரிய அச்சுறுத்தலை உருவாக்கினார்கள்.

இந்த நிலையில் வில்லியம்சன் தந்த கேட்ச் வாய்ப்பை முகமது சமி தவறவிட்டார். மும்பை மைதானம் முழுவதும் மிகப்பெரிய ஏமாற்றம் எதிரொலித்தது.

- Advertisement -

முதல் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்த முகமது சமி, இதற்கு அடுத்து திரும்பவும் பந்துவீச்சுக்கு வந்து மேற்கொண்டு ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி, மொத்தம் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணிக்கு வெற்றியை திருப்பித் தந்து ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தியிருக்கிறார்.

வெற்றிக்குப் பிறகு பேசிய முகமது சமி “நான் எனது முறைக்காக காத்திருந்தேன். நான் அதிகமாக வெள்ளைப்பந்து கிரிக்கெட் விளையாட வில்லை. யார்க்கர் மற்றும் மெதுவான பந்துகள் பற்றி என்னுடைய மனதில் இருந்தது. புதிய பந்தில் விக்கெட்டுகள் வீழ்த்த முயற்சி செய்தேன்.

வில்லியம்சனின் கேட்சை விட்டதற்காக நான் நிறைய வருத்தப்பட்டேன். நான் அங்கிருந்து வேகத்தை எடுக்க முயற்சி செய்தேன். அவர்கள் தங்களுடைய ஷாட்களை விளையாடினார்கள். இதன் காரணமாக நான் ஒரு வாய்ப்பை பெற்றேன்.

பனி குறித்து பயம் இருந்தது.ஆனால் பனி வரவில்லை. ஒருவேளை வந்திருந்தால் விஷயங்கள் எல்லாம் மோசமானதாக மாறியிருக்கும். இங்கு மெதுவான பந்துகள் வேலை செய்யவில்லை.

நான் எல்லாவற்றையும் ஆச்சரியமாக உணர்கிறேன். இது ஒரு பெரிய மேடை. கடந்த இரண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் நாங்கள் அரை இறுதியில் தோற்று வெளியே வந்தோம். எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ள பார்க்கிறேன். இனி எல்லோருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு எப்பொழுது கிடைக்கும்!” என்று தெரியாது என்று கூறியிருக்கிறார்!