டிரெஸ்ஸிங் ரூமில் அவர் அழுதால் வாய்ப்பு தருவீர்களா? – பாகிஸ்தான் தேர்வுக் குழுவை விளாசிய அகுப் ஜாவித்!

0
989
Javed

ஆஸ்திரேலியாவில் இந்த மாதம் தொடங்கி நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு ஒரு அணியைத் தேர்வு செய்துவிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகமும், பாகிஸ்தான் தேர்வு குழுவும் பெரிய விமர்சனங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது!

கேப்டன் பாபர் ஆசம் தன்னுடைய நண்பர் என்பதால் உஸ்மான் காதிருக்கு உலகக் கோப்பை அணியில் வாய்ப்பு தந்திருக்கிறார் என்றும், குஷ்தில் ஷா ஒரு இனக்குழுவைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு வாய்ப்பு தரப்படுகிறது என்றும் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

- Advertisement -

மேலும் பாகிஸ்தான் அணியின் மிகப்பெரிய பலமாக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரிஸ்வான் மற்றும் பாபர்தான் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஆட்டமிழந்தால் பாகிஸ்தான் அணியின் மிடில் வரிசை மொத்தமாக சரிந்து விடுகிறது. இதனால் உள்நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தொடரை இழந்தார்கள். அந்தத் தொடரின் கடைசி போட்டியில் பாகிஸ்தான் ரசிகர்களில் சிலர் குஷ்தில் ஷா பேட்டிங் செய்யும் பொழுது அவரை “பார்ச்சி” என்று கத்தி அவமானப்படுத்தினார்கள். இதனால் அவர் மனம் உடைந்து டிரஸ்ஸிங் ரூமில் அழுதார் என்ற தகவல் கூறப்பட்டது.

இப்பொழுது இது பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அகுப் ஜாவித் கூறும்பொழுது
” இது துரதிஷ்டவசமானது. குழுவாக இருந்தாலும் சரி, வீரராக இருந்தாலும் சரி, அணி நிர்வாகமாக இருந்தாலும் சரி, திறமையை செயல்படுத்துவதே முக்கிய வேலை. ஒரு விளையாட்டில் நீங்கள் 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் பொழுது உங்களை யாரும் பாராட்ட தேவையில்லை. உங்களுக்கே நீங்கள் நன்றாக வேலை செய்தீர்கள் என்று தெரியும். மேலும் நீங்கள் சரியாகச் செய்தால் பாராட்டப்படுவீர்கள். குஷ்தில் டிரெஸ்ஸிங் ரூமில் அழுவதால் என்ன பயன்? மாறாக அவர் சிறப்பாக செயல்படுவதில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் 50, 100 ரன்களை அடித்தால் உங்களை மக்கள் புகழ்வார்கள். ஏன் இதில் கவனம் செலுத்துவதில்லை? ” என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” மக்கள் மிடில் ஆர்டர் நன்றாக விளையாடவில்லை என்று கூறுகிறார்கள். நான் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று கூற முடியுமா? இது அலுவலகத்திற்குள் நடக்கவில்லை. மைதானத்தில் நடக்கிறது தொலைக்காட்சியில் மக்கள் பார்க்கிறார்கள். இதை விட்டு உங்களால் ஓட முடியாது. நீங்கள் உங்களுடைய கணினியில் வேலை செய்ய வேண்டும். மேலும் உங்களுக்கு வேறு வீரர்கள் யாருமே இல்லையா என்று நீங்கள் சிந்திக்க வேண்டும் ” என்று சரமாரியாக விளாசித் தள்ளி இருக்கிறார்.

- Advertisement -