ஆசியக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வாங்குவேன் – பாகிஸ்தான் வீரர் தெரிவிப்பு!

0
118
Asiacup2022

நாளை 15வது ஆசிய கோப்பை தொடர் யுனைடெட் அரபு எமிரேட்டில் தொடங்குகிறது. இதன் இரண்டாவது போட்டியில் ஞாயிற்றுக்கிழமை துபாய் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் சந்தித்துக் கொள்ள இருக்கின்றன.

இந்தப் போட்டி குறித்து தான் தற்போது கிரிக்கெட் உலகில் எங்கும் பேச்சாக இருக்கிறது. இந்த தொடரில் இந்த இரண்டு அணிகளோடு மேலும் நான்கு அணிகள் கலந்து கொண்டாலும் மற்ற அணிகள் குறித்து எந்த பேச்சுவார்த்தையும் கிரிக்கெட் உலகில் இல்லை.

- Advertisement -

உலகின் எந்த மூலையில் இந்தியா-பாகிஸ்தான் மோதிக் கொண்டாலும் அங்கு மைதானங்கள் நிரம்பி வழியும் வணிகம் பெரிய அளவில் நடைபெறும் என்பது தெரிந்த விஷயம் தான். அதேபோல் இந்த முறையும் புதிய கோப்பை தொடரில் சூழ்நிலை நிலவுகிறது.

இரு அணிகளையும் எடுத்துக்கொண்டால் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாததுபோல் பாகிஸ்தான் அணியில் ஷாகின் ஷா அப்ரிடி இல்லை. பேட்டிங்கை எடுத்துக்கொண்டால் பாகிஸ்தான் அணி முதல் மூன்று பேட்ஸ்மேன்களை அதிகம் நம்பியிருக்கிறது. சமயத்தில் இந்திய அணி பேட்டிங்கில் பாகிஸ்தான் அணியை விட கொஞ்சம் பலமானதாக இருக்கிறது. சுழற்பந்து வீச்சை எடுத்துக்கொண்டால் பாகிஸ்தான் அணி தரப்பில் சதாப் கான் மட்டுமே குறிப்பிடும்படியாக இருக்கிறார். இந்திய அணியில் சாகல், அஸ்வின், ரவி பிஷ்னோய் என பெரிய பட்டாளமே இருக்கிறது.

தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஆன சதாப் கான் ஆசிய கோப்பை குறித்து தனது எண்ணங்களையும் விருப்பங்களையும் தெரிவித்து இருக்கிறார. ஆசிய கோப்பை குறித்து அவர் கூறும் பொழுது ” ஆசிய கோப்பை தொடர் நாயகனாக நான் வரவேண்டும் என்று விரும்புகிறேன். இதைச் சொல்வது எளிது ஆனால் செய்வது கடினம் என்று எனக்கு தெரியும். விருப்பம் இருக்கும் இடத்தில் அதை அடைவதற்கு வலியும் இருக்கும். முடிந்த சிறந்த முயற்சிகளை அணிக்கு வழங்குவதில் நான் மிக உறுதியாக இருக்கிறேன். பாகிஸ்தான் அணிக்காக கோப்பையை உயர்த்த முடிந்தால் அது எனக்கு மிக மகிழ்வான விஷயம். எனக்கு ஓய்வு என்பது இரண்டாம் பட்சம்” என்று தெரிவித்து இருக்கிறார்!

- Advertisement -

மேலும் பேசிய அவர் ” சாகின் ஷா அப்ரிடி எங்கள் அணியின் மிகப்பெரிய ஸ்டிரைக் பவுலர் என்பதால் அவர் இல்லாதது எங்களுக்கு இழப்புதான். ஹரி ரவுவ் அண்ட் கோ மீது எங்களுக்கு பெரிய நம்பிக்கை இருக்கிறது. கிரிக்கெட்டின் அழகு என்னவென்றால் இது ஒரு தனிநபர் விளையாட்டு கிடையாது இது ஒரு குழு விளையாட்டு. எங்கள் குழுவில் திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். எனக்கு ஹாரிஸ் ரவுப் மீதும் பந்துவீச்சாளர்களில் மீதும் நம்பிக்கை இருக்கிறது. எங்கள் அணியில் உள்ளே நல்ல சூழ்நிலையே நிலவுகிறது. ஆனாலும் நாங்கள் இன்னும் ஒரு மனநிறைவை எட்டவில்லை. நாங்கள் தொடர்ந்து கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்!